கமலுக்கு கொடுத்த அதே சம்பளம் வடிவேலுவுக்கு!. தேவர் மகன் படத்தில் நடந்த சம்பவம்!..

மதுரையிலிருந்து சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சென்னைக்கு வந்து ராஜ்கிரண் அலுவலகத்தில் 4 வருடங்கள் தங்கி சினிமாவில் வாய்ப்பு தேடியவர்தான் வடிவேலு. இந்த தகவலை கூட சமீபத்தில்தான் வடிவேலு ஒத்துக்கொண்டார். ராஜ்கிரண் மூலம் என் ராசாவின் மனசிலே படத்தில் நடிக்க துவங்கிய அதன்பின் சின்னக்கவுண்டர், தேவர் மகன், ராஜ்கிரண் இயக்கி நடித்த அரண்மனைக்கிளி உள்ளிட்ட பல படங்களிலும் நடித்து பிரபலமானார் வடிவேலு.

துவக்கத்தில் இவர் நடித்தது எல்லாமே கிராமத்து கதைகளை கொண்ட திரைப்படங்கள்தான். அதுதான் அவருக்கு பொருத்தமாக இருந்தது. ஆனால், ஷங்கர் இவரை தான் இயக்கிய காதலன் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் சிட்டி தொடர்பான கதைகளிலும் நடிக்க துவங்கினார். அதற்கு வடிவேலுவுக்கு உதவியது பிரபுதேவாவின் படங்கள்தான். வின்னர், கிரி போன்ற படங்களின் காமெடி வடிவேலுவை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது.

அதன்பின் நம்பர் ஒன் காமெடி நடிகராக மாறினார் வடிவேலு. அவரின் உடல் மொழி, மதுரை பாஷை என எல்லோருக்கும் பிடித்த காமெடி நடிகராக மாறினார். கவுண்டமணிக்கு பின் ஒரு நாளைக்கு 10 லட்சம் என சம்பளம் வாங்கும் நடிகராகவும் வடிவேலு மாறினார். இதனால் தலைக்கணம் அதிகமாகி நிறைய ஆட்டமும் போட்டார்.

4 மணி நேரம் மட்டுமே நடித்துவிட்டு முழு சம்பளம் வாங்கிக்கொள்வார். அதேநேரம், அவரோடு நடிக்கும் காமெடி நடிகர்களுக்கு மிகவும் குறைவான சம்பளம் வாங்கி கொடுப்பார். வடிவேலுவின் மீது கோபம் இருந்தாலும் அவரை நம்பியே பிழைப்பு என்பதால் யாரும் அதுபற்றி பேசவில்லை. அதேநேரம், இம்சை அரசன் 24ம் புலிகேசி படத்தில் பிரச்சனை செய்து ரெட் கார்டு வாங்கி 4 வருடங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தபோது அவரை பற்றி பலரும் உண்மையை சொன்னார்கள். அதன்பின் சில படங்களில் ஹீரோவாக நடித்தார். அந்த படங்கள் ஓடவில்லை. இப்போது மீண்டும் காமெடியனாக நடிக்க துவங்கிவிட்டார். சுந்தர்.சியுடன் இணைந்து நடித்த கேங்கர்ஸ் படம் கூட கடந்த 24ம் தேதி வெளியானது.

வடிவேலுவின் சினிமா கெரியரில் தேவர் மகன் அவருக்கு முக்கிய படமாக இருந்தது. வடிவேலுவால் குணச்சித்திர வேடத்திலும் நடிக்க முடியும் என நிரூபித்த படம் அது. அதுவும் நடிகர் திலகம் சிவாஜி கணேசனோடு இணைந்து சில காட்சிகளில் நடிக்கும் வாய்ப்பு வடிவேலுவுக்கு கிடைத்தது. இந்த படத்தில் வடிவேலுவுக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் 15 ஆயிரம் ரூபாயாம். கமல் சினிமாவில் வளர்ந்து கொண்டிருந்த நேரத்தில் பதினாறு வயதினிலே படத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளமும் 15 ஆயிரம்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.