கீர்த்தி மட்டுமா? சூர்யா 46 படத்திற்காக ஹீரோயின்களுக்கு வலைவீசும் படக்குழு.. இத்தனை பேரா?
Suriya 46:தமிழ் சினிமாவில் அனைவரின் அன்பை பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் சூர்யா. நடிப்பையும் தாண்டி இவரால் இன்று ஒரு 8000 மாணவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள் என்றால் மாணவர்களின் நலனில் அதிக அக்கறை கொண்ட நடிகராக இருந்து வருகிறார். தன்னுடைய அகரம் அறக்கட்டளை நிறுவனத்தால் ஆண்டுதோறும் பல்வேறு மாணவர்கள் உருவாகி வருகிறார்கள். அதில் சாதனை படைத்தவர்கள் இன்று பெரிய பெரிய அதிகாரிகளாகவும் மாறியிருக்கிறார்கள்.
நடிகர்களில் சூர்யாவின் இந்த செயல் கூடுதல் கவனத்தை பெற்றுள்ளது. இந்த நிலையில் தற்போது சூர்யா ரெட்ரோ படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் படத்திற்கு இசையமைத்துள்ளார். சமீபத்தில்தான் படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது.
பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் தற்போது சூர்யா கவனம் செலுத்தி வருகிறார். கங்குவா படத்திற்கு பண்ண தவறை இனிமேல் எந்த படத்திலும் பண்ணக் கூடாது என்பதிலும் கூடுதல் கவனமாக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் அடுத்ததாக சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கும் இன்னொரு படத்திலும் நடித்து வருகிறார்,
இதற்கிடையில் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்திலும் மற்றுமொரு படத்தில் இணைய போவதாக சமீபத்தில் அறிவித்திருந்தார். இந்தப் படம் குறுகிய கால படைப்பு என்பதால் கூடிய சீக்கிரம் படப்பிடிப்பை துவங்க இருக்கிறார்கள். ஏற்கனவே வெங்கி அட்லூரி இயக்கும் படத்தில் ஒரு நாயகியாக மமீதா பைஜூ நடிப்பதாக கூறப்பட்டது. இன்னொரு நாயகியாக கீர்த்தி சுரேஷ் இணைய வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்பட்டது.

ஆனால் வெறும் பேச்சுவார்த்தையாகத்தான் போய்க் கொண்டிருக்கிறதாம். கீர்த்தி சுரேஷ் மட்டுமில்லாமல் மிர்னாள் தாகூர், மீனாட்சி சௌத்ரி என அடுத்தடுத்து பல நடிகைகளிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். இந்த படத்தில் அப்படி எத்தனை ஹீரோயின்கள் என்று பேசி வரும் நிலையில் மமீதா பைஜூ ஒரு நாயகி என உறுதியாகிவிட்டதாம். இன்னொரு நாயகிக்கான தேடுதல் படலம்தான் இப்போது நடந்து வருகிறதாம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


