இளையராஜாவை கேட்க வைக்காதீங்க… ரைட்ஸ், அக்ரிமெண்ட்னா இதுதான்..! அட்டகத்தி தினேஷ் சொன்ன விஷயம்…!
பா.ரஞ்சித்தின் இயக்கத்தில் அட்டக்கத்தி படத்தில் நடித்து தமிழ்சினிமா உலகையே திரும்பிப் பார்க்க வைத்தவர் தினேஷ் இந்தப் படத்தில் இருந்து அவரது பெயரோடு அட்டக்கத்தியும் ஒட்டிக் கொண்டது. இதன்பிறகு பல படங்களை நடித்து வந்தார். இருந்தாலும் அவருக்கு பெரிய பிரேக் கொடுத்த படம்னா அது லப்பர் பந்து தான். இந்தப் படத்தில் விஜயகாந்தின் தீவிர ரசிகராக அவர் நடித்து இருந்தார்.
படத்தில் வரும் ‘நீ பொட்டு வைத்த தங்கக்குடம்’ பாடலுக்கு ரசிகர்கள் திரையரங்கில் அப்படி ஆட்டம் போட்டனர். படம் முழுக்க ஆங்காங்கே விஜயகாந்தின் புகைப்படங்களும், பாடல்களும் தெறிக்க விட்டு அவரை நினைவூட்டின. இந்தப் படமும் ஒரு வகையில் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் தான் இருந்தது. பல்வேறு தரப்பினரும் பாராட்டினர். சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் இந்தப் படம் வசூலிலும் சாதனை படைத்தது.
அந்த வகையில் இந்தப் படத்தின் வெற்றிவிழாவுக்குப் பிறகு படக்குழுவினர் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றனர். சமீபத்தில் குட் பேட் அக்லியில் இளையராஜாவின் பாடல்கள் பயன்படுத்தியது சர்ச்சையாக வெடித்தது. அப்போது இளையராஜா காப்பிரைட் வழக்கு போட, தயாரிப்பாளர் எவரிடம் உரிமை உள்ளதோ அங்கு முறைப்படி வாங்கி விட்டதாகச் சொல்லிவிட்டார்.

இளையராஜாவுக்குப் பேராசை, பணத்தாசை அப்படி இப்படின்னு சமூகவலைதளங்களில் அள்ளித்தெளித்தனர். அந்த வகையில் இப்போது அட்டக்கத்தி தினேஷூம் தன் பங்கிற்கு கருத்தைத் தெரிவித்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.
கங்கை அமரன் சாருக்கும் நாங்க நன்றி சொன்னோம். இளையராஜா சாரை நேரில் சந்தித்து நாங்கள் நன்றி சொன்னோம். ரைட்ஸ் மற்றும் அக்ரீமெண்ட் என்பது இசை அமைத்தவர்களுக்கு என்னைக்கும் அது போயிட்டே தான் இருக்கணும். ஏனென்றால் அது அவங்க கிட்ட இருந்து வந்தது. அதற்கும் நம்ம மரியாதை செலுத்த வேண்டும்.
ராஜா சார் கேட்பது தார்மீகமாகவும், தர்மமாகவும் ரொம்ப கரெக்டான விஷயம்தான். அதை நாம் கேட்காமல் தர வேண்டும். அதை நாம் கேட்கிற மாதிரி வச்சுக்கக்கூடாது என்கிறார் நடிகர் அட்டகத்தி தினேஷ்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


