மிஷ்கின் கொடுத்த சாபம்.. இந்தாட்டம் ஆட்டுதே! விஷாலுக்கு வந்த நெருக்கடி
Mysskin: ஒரு படம் உருவாகிறது என்றால் அந்த படத்திற்கு பின்னாடி எவ்வளவோ சண்டை கோபம் பிரச்சனை என இத்தனையையும் கடந்து தான் அந்த படம் உருவாகிறது. அந்த வகையில் விஷாலுக்கும் மிஷினுக்கும் இடையே நடந்த போர் என்றே சொல்லலாம். அதிலும் குறிப்பாக மிஷ்கின் விஷாலை பற்றி வாய்க்கு வந்தபடி பேசி இருந்தார். ஒருமையில் விஷாலை கண்டபடி ஒரு மேடையில் திட்டி தீர்த்தார் மிஷ்கின்.
அதற்கு பதிலடியாக விஷாலும் அவருடைய தரப்பு நியாயத்தை தெளிவு படுத்தினார். துப்பறிவாளன் 2 படத்தில் தேவையில்லாத செலவுகளை மிஷ்கின் ஏற்படுத்தி விட்டதாகவும் அதனால்தான் இந்த பிரச்சனையே என்றும் விஷால் தெரிவித்திருந்தார். அதனால் தான் துப்பறிவாளன் 2 படம் பாதியிலேயே நின்று போனது. மிஷ்கினும் அந்த படத்தில் இருந்து விலகினார்.
அதன் பிறகு துப்பறிவாளன் 2 திரைப்படத்தை தானே இயக்கப் போவதாகவும் அந்த படத்தை அவருடைய கம்பெனி தான் தயாரிக்கப் போவதாகவும் ஒரு தகவல் வெளியாகி கொண்டு இருந்தது. அதற்கிடையில் அவருடைய உடல் நலம் குறித்த பல பிரச்சனைகளும் செய்திகளாக வெளிவந்தன. அப்பொழுதுதான் லத்தி திரைப்படம் வெளியாகி அந்தப் படமும் பெரிய சருக்களை சந்தித்தது.
இனி விஷால் அவ்வளவுதான் என்றிருந்த நிலையில் யாருமே அவரை அணுகவில்லை. அதனால் துப்பறிவாளன் 2 படத்தையாவது எடுக்கலாம் என்று நினைத்தார் விஷால். அதன்பிறகுதான் உடல் நிலை சரியில்லாமல் கொஞ்ச நாள் வெளியில் வராமல் இருந்தார். இதற்கிடையில்தான் மதகஜராஜா திரைப்படம் ஒரு பெரும் நம்பிக்கையை கொடுத்தது. அந்த படம் மாபெரும் வெற்றியை பெற்றதோடு அடுத்தடுத்து விஷாலை வைத்து படம் பண்ணவும் இயக்குனர்கள் ஆர்வம் காட்டினர்.
விஷால் அடுத்து ரவி அரசு என்ற இயக்குனருடன் ஒரு புதிய படத்தில் இணையப் போகிறார் என்ற ஒரு தகவல் வெளியானது. இன்னொரு பக்கம் துப்பறிவாளன் 2 திரைப்படம் வருமா வராதா என்ற கேள்வியும் எழுந்து வருகின்றது. துப்பறிவாளன் 2 படத்திற்கு அதிக பட்ஜெட் தேவைப்படுவதால் விஷால் கம்பெனி கொஞ்சம் யோசிக்கிறதாம். அதனால் இப்போதைக்கு இந்தப் படத்தை தள்ளிவைக்கலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கிறாராம் விஷால்.

வேண்டுமென்றால் வேறொரு தயாரிப்பு நிறுவனம் இந்தப் படத்தை எடுக்க முன்வந்தால் ஒழிய இந்தப் படம் டேக் ஆஃப் ஆகும். இல்லையென்றால் இப்போதைக்கு வாய்ப்பே இல்லை. இதை பற்றி கோடம்பாக்கத்தினர் ஒருவேளை மிஷ்கின் விட்ட சாபமாகக் கூட இருக்கலாம் என்றும் சொல்கிறார்கள்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


