அந்த படம் மட்டும் இல்லைனா? ‘டூரிஸ்ட் ஃபேமிலி’க்கும் கமல்தான் இன்ஸ்பிரேஷனா?
Tourist Family: டூரிஸ்ட் ஃபேமிலி: சசிகுமார் – சிம்ரன் நடிப்பில் மே 1 ஆம் தேதி ரிலீஸாக கூடிய திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்தப் படத்தை அறிமுக இயக்குனரான ஜீவிந்த் இயக்கியிருக்கிறார். படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் சமீபத்தில்தான் சென்னையில் நடைபெற்றது. படத்தை பார்த்த முக்கிய பிரபலங்கள் படத்தை பெரிய அளவில் பாராட்டி பேசியிருந்தார்கள். சிம்ரன் சசிகுமார் ஜோடியும் முதன் முறையாக இணைந்திருப்பதால் படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சசிகுமார் தேர்ந்தெடுக்கும் கதை: சமீபகாலமாக சசிகுமார் கதைகளை தேர்ந்தெடுப்பதில் மிகவும் கவனம் செலுத்தி வருகிறார். அவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான அயோத்தி திரைப்படமும் இதுவரை யாரும் தொடாத கதை. வித்தியாசமான முறையில் கடைசியில் இரண்டு மதங்களுக்கு இடையே ஒற்றுமையை ஏற்படுத்துவது மாதிரி படத்தை முடித்திருப்பார்கள். அயோத்தி திரைப்படம் மூலம் நல்ல ஒரு மாற்றமும் நிகழ்ந்திருக்கிறது.
ஈழ அகதிகளின் தவிப்பு: டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் ஈழ அகதிகளாக இங்கு வரும் குடும்பம் எதிர்கொள்ளும் பிரச்சனை , போராட்டம் போன்றவற்றை விளக்கும் திரைப்படமாகத்தான் உருவாகியிருக்கின்றது. இந்தப் படத்தின்மூலமும் எதிர்காலத்தில் இப்படி வரும் அகதிகளுக்கு குடியுரிமை பெற்றுத்தரும் படமாக இந்த டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் அமையும் என சசிகுமார் கூறியிருந்தார்.
கமல்தான் இன்ஸ்பிரேஷன்: டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் இயக்குனர் ஒரு பேட்டியில் கூறும் போது இந்தப் படத்தின் கதையை ஒருவருடமாக பேசிக் கொண்டிருந்தாராம். ஆரம்பத்தில் தெனாலி படத்தின் இரண்டாம் பாகமாகத்தான் எடுக்க வேண்டும் என நினைத்திருக்கிறார். அப்படி ஆரம்பித்ததுதான் டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம். ஒரு குடும்ப என்டர்டெயின்மெண்ட் படமாக பண்ண வேண்டும் என ஆசைப்பட்டு கடைசியில் இப்படி ஒரு படமாக தயாராகியிருக்கிறது என இயக்குனர் கூறினார்.

படத்தில் இலங்கை தமிழ்தான் சசிகுமார் மற்றும் சிம்ரன் பேசியிருப்பார்கள். தெனாலி படத்திலும் கமல் இலங்கை தமிழில் அழகாக பேசியிருப்பார். தமிழ் சினிமாவை பொறுத்தவரைக்கும் கமலை தொடாமல் யாரும் ஒரு படத்தை எடுத்துவிட முடியாது. அப்படி எல்லா துறைகளிலும் கமல் ஒரு முன்னோடியாகத் திகழ்ந்து வருகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


