குட் பேட் அக்லிக்கு 30 நாள்னா? சூரி படத்துக்கு? இதெல்லாம் ஓவர்.. ஜிவி சொன்ன தகவல்
Good Bad ugly: அஜித் நடிப்பில் கடந்த 10 ஆம் தேதி ரிலீஸான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் தயாரான இந்தப் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதன் மூலம் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தமிழில் முதன் முறையாக ஒரு படத்தை தயாரித்திருக்கிறது. முதல் படமே பிளாக் பஸ்டர் மூவி படமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திற்கு அமைந்தது.
அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி திரைப்படம் யாருமே எதிர்பாராத ஒரு கடுமையான விமர்சனத்திற்கு ஆளானது. கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு வெளியான திரைப்படம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பில் இருந்தது விடாமுயற்சி படம். மகிழ்திருமேனி மேஜிக் கண்டிப்பாக இந்தப் படத்திற்கு வொர்க் அவுட் ஆகும் என நினைத்தனர். ஆனால் அஜித் கெரியரில் இப்படி ஒரு படமா என்றுதான் அனைவரும் பேச ஆரம்பித்துவிட்டனர்.
பதிலடி கொடுத்த குட் பேட் அக்லி: விடாமுயற்சி படத்தில் அஜித் ஒரு சாதாரண மனிதன் தன் அன்றாட வாழ்க்கையில் எப்படி இருப்பானோ அப்படியான ஒரு கேரக்டரில்தான் நடித்திருப்பார். ஆனால் அது மக்களுக்கு பிடிக்கவில்லை. குட் பேட் அக்லி படத்தில் அதற்கு நேர் மாறாக நடித்திருப்பார். இந்தப் படத்தில் கூட ஒரு வசனம் வரும் ‘குட்டா இருந்தாலும் இந்த உலகம் நம்ம பேடாத்தான் பார்க்க ஆசைப்படுது’ என சொல்லியிருப்பார்.
ப்ளாக் பஸ்டர் ஹிட்: படத்தில் ரசிக்கும் படி என எந்தவொரு கதைகளமும் இல்லை. படமுழுக்க மாஸ், ஆக்ஷன் என பிரேமுக்கு பிரேம் அஜித்தை ஸ்டைலிஷாக காட்டியிருப்பார் ஆதிக். அதை வைத்தே படத்தை ஓட வைத்துவிட்டனர் ரசிகர்கள். கிட்டத்தட்ட இரண்டு வார முடிவில் குட் பேட் அக்லி படம் 250 கோடி வசூல் பெற்றிருப்பதாக சொல்லப்படுகிறது. படத்திற்கு கூடுதல் ப்ளஸாக அமைந்தது ஜிவியின் இசை.
கடைசியில் நுழைந்த ஜிவி: இந்தப் படத்தில் முதலில் தேவி ஸ்ரீ பிரசாத்தான் இசையமைக்க வேண்டியது. ஆனால் தயாரிப்பு தரப்புக்கும் தேவி ஸ்ரீ பிரசாத்துக்கும் இடையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக இந்தப் படத்தில் இருந்து விலகினார் தேவி ஸ்ரீ பிரசாத். கடைசியில் தான் ஜிவி படத்திற்குள் நுழைந்தார். அதனால் இந்தப் படத்திற்கு வெறும் 30 நாள்களில் இசையை போட்டுக் கொடுத்தாராம் ஜிவி.

ஜிவியின் மண்டாடி: இந்த நிலையில் தற்போது பெரும்பாலான படங்களுக்கு ஜிவிதான் இசையமைத்து வருகிறார். சூர்யா 46 படத்திற்கும் அவர்தான் இசை. சூரி நடிக்கும் மண்டாடி படத்திற்கு அவர்தான் இசை. மண்டாடி படத்திலும் கடைசி 10 நாளில்தான் இந்தப் படத்திற்குள் இணைந்திருக்கிறார் ஜிவி. குட் பேட் அக்லி படத்திற்கு 30 நாளில் இசை போட்டுக் கொடுத்தேன். அதனால் மண்டாடி படத்திற்கு இரண்டு நாள்களில் இசை போட்டுக் கொடுக்க வேண்டும் என கேட்கிறார்கள் என ஜிவி ஒரு மேடையில் கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


