குட்பேட் அக்லியில் இளையராஜா பாடல் இடம்பெற காரணம் ஜிவி கிடையாதாமே! அப்போ யாரு?
குட்பேட் அக்லி படத்தில் இளையராஜாவின் பாடல்கள் இடம்பெற்று ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. இது சர்ச்சையாகவும் வெடித்தது. இளையராஜா காபிரைட் கேட்க, அதற்கு தயாரிப்பாளர் யாரிடம் வாங்கணுமோ அங்க வாங்கியாச்சுன்னு சொல்லி விட்டார். இது பல விமர்சனங்களை முன் வைத்தது. கங்கை அமரனும் கோடிகள்ல சம்பளம் கொடுத்து இசை அமைப்பாளரைப் போடுறாங்க.
அவங்க இளையராஜா பாடலை ஏன் பயன்படுத்தணும்? அவங்களே இசை அமைக்கலாமே. அவங்க பாட்டுக்குக் கைதட்டாத கூட்டம் இளையராஜா பாடலுக்குத் தானே கைதட்டுது. அப்புறம் அவர் கேட்குறதை கொடுத்தா என்னன்னு கேள்வி கேட்டார். அந்த வகையில் பாடலை இப்படி பயன்படுத்துவதற்குப் பதிலா இந்தப் படத்துக்கு இசை அமைப்பாளரா இளையராஜாவையே போட்டால் என்னன்னு ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் சொன்ன பதில் இதுதான்.
ஒரு படத்துக்கு இசை அமைப்பாளர் யாருன்னு முடிவு பண்றது இயக்குனர் தான். குட் பேட் அக்லியில் இளையராஜா பாடல்கள் இடம்பெற்றதுக்குக் காரணம் இசை அமைப்பாளர் ஜிவி பிரகாஷ் தான்னு எல்லாரும் சொல்றாங்க. இந்தப் படத்துல இத்தனை சாங் இளையராஜாகிட்ட இருந்து எடுத்துக்கலாம்னு முடிவு பண்றதே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தான்.
அப்போ ஜிவி. பிரகாஷைக் குறை சொல்றதுல என்ன இருக்கு? அவரு வந்து எவ்வளவோ சூப்பரான பாடல்கள் எல்லாம் போட்டுக் கொடுத்துருக்காரு. எவ்வளவோ மெலடி பாடல்கள் இன்னமும் அவரோட பேரைச் சொல்லிக்கிட்டு இருக்கு. இத்தனைப் படங்கள் அவரு பண்ணி இருக்காருன்னா எந்தத் திறமையும் இல்லாம அவரு இந்த இடத்துக்கு வரவே முடியாது. அப்ப இவங்க என்ன பண்றாங்கன்னா இவங்களுக்குத் திறமையே கிடையாது. இவங்க சம்பளம் மட்டும் வாங்கிக்கறாங்க. பாட்டை மட்டும் இன்னொருத்தர் பாட்டைப் போடுறாங்கன்னு ஒரு குற்றச்சாட்டை வச்சிக்கிட்டே இருக்காங்க.

இந்தப் படத்துல இளையராஜா பாடல் இடம்பெற்றதே ஜிவி. பிரகாஷூக்குத் தெரியாம இருந்துருக்கும். ஒரு சண்டைக்காட்சியில பயன்படுத்துறாரு. இன்னொரு பக்கம் வேறொரு இடத்துல பயன்படுத்துறாரு. ஃபைனலா ரீரெக்கார்டிங்குக்கு வரும்போதுதான் எங்கெல்லாம் போட்டுருக்காங்கன்னு அவங்களுக்குத் தெரியும்.
இவருக்கிட்ட படத்துக்கு 2 பாட்டு வேணும். போட்டுக் கொடுங்க சார்னு சிச்சுவேஷனை சொல்லி வாங்கிருப்பாங்க. குட்பேட் அக்லி படத்துல அவரு கடைசி நேரத்துல தான் வந்து ஜாய்ன் பண்ணினாராம். ரீ ரெக்கார்டிங்கை 30 நாள்ல பண்ணிருக்காரு. இந்தப் படத்துக்கு உழைப்பை பரிபூரணமாகவும் கொடுத்துருக்காரு என்கிறார் அந்தனன். அதே நேரம் இளையராஜா பாடல்கள் இடம்பெற முழுக்காரணம் ஆதிக் ரவிச்சந்திரன் தான் என்றும் அடித்துச் சொல்கிறார் அந்தனன்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


