மீண்டும் கோலிவுட் பக்கம் திரும்பிய சைதன்யா இரண்டாவது மனைவி… என்ன சேதி தெரியுமா?

Sobhita Dhulipala: பிரபல தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவின் இரண்டாவது மனைவி சோபிதா துலிபாலா மீண்டும் தமிழில் நடிக்க இருக்கும் தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.

மாடலிங் செய்து வந்தவர் சோபிதா துலிபாலா. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் என சில படங்களில் நடித்தாலும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையவில்லை. அந்த நேரத்தில் மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்தார்.

வானதி கேரக்டரில் அவருக்கு பெரிய முக்கியத்துவம் இருந்த கேரக்டர் என்பதால் ரசிகர்கள் அவருக்கு ஆதரவு தெரிவித்திருந்தனர். ஆனால் அதை தொடர்ந்தும் அவருக்கு பெரிய வாய்ப்புகள் எதுவும் அமையாமலே இருந்து வந்தது.

இந்நிலையில் நாக சைதன்யாவை கல்யாணம் செய்துக்கொண்ட சோபிதாவிற்கு மீண்டும் தமிழ் ரசிகர்களிடம் எதிர்ப்பு கிளம்பியது. இந்த நேரத்தில் அவருக்கு மீண்டும் ஒரு தமிழ் பட வாய்ப்பு கிடைத்து இருக்கிறது. பா.ரஞ்சித் இயக்கத்தில் கெத்து தினேஷ் நடிக்கும் அடுத்த படம் தான் அது.

இப்படத்தில் ஆர்யா, கலையரசன் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கின்றனர். படக்குழு குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பரபரப்பாக நடந்து வந்த ஷூட்டிங் தற்போது முதல் ஷெட்யூலை முடித்து இருக்கின்றனராம். இரண்டாவது ஷெட்யூல் சென்னையில் விரைவில் தொடங்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கிறது. இதற்காக பிரம்மாண்ட செட் வேலைகளும் நடந்து வருகிறதாம்.

ஏற்கனவே சமந்தாவின் வாழ்க்கையை தட்டி பறித்துவிட்டதாக சோபிதா மீது கடுப்பில் தமிழ் ரசிகர்கள் இருப்பதால் இந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.