குட் பேட் அக்லியில் இளையராஜா பாடல்… கங்கை அமரன் பேசுனதுல என்ன தப்பு?
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய குட்பேட் அக்லியில் இளையராஜாவின் பாடல்கள் இருந்தன. அவை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றன. வழக்கம்போல இளையராஜாவும் காபிரைட்டுக்காக வழக்கு தொடர்ந்தார். அதற்கு அந்தப் பாடலுக்கான உரிமை யாரிடம் உள்ளதோ அவர்களிடம் முறைப்படி அனுமதி வாங்கியாச்சுன்னு தயாரிப்பு தரப்பு சொன்னது. இளையராஜாவோ 5கோடி வரை நஷ்ட ஈடு கேட்டு இருந்தார்.
இது குறித்து கங்கை அமரன் பேசியபோது குட்பேட் அக்லியில் இளையராஜா பாடல் வரும்போதுதான் ரசிகர்கள் எழுந்து நின்று கைதட்டுகின்றனர். ஆட்டம் போடுகின்றனர். ஆனால் கோடிக்கணக்கில் சம்பளம் கொடுத்து இசை அமைப்பாளரை நியமித்து அவர் போட்ட இசையை யாருமே ரசிக்கவில்லை.
அதனால் இளையராஜா 5 கோடி கேட்டதுல என்ன தப்பு என்று காட்டமாக கங்கை அமரன் பேட்டி கொடுத்திருந்தார். இதுகுறித்து பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்கையில் குட்பேட் அக்லியில் இளையராஜாவின் பாடல்களைப் பயன்படுத்தியதைக் குறித்து கங்கை அமரன் கொஞ்சம் காட்டம்சாட்டமாகத்தான் விமர்சித்து விட்டார்.
என்றாலும் அவர் சொல்லி இருக்கிற ஒரு சில விஷயங்களில் நியாயம் இல்லாமல் இல்லை என்பதுதான் என்னோட கருத்து. அந்தப் பாடலுக்கான உரிமையை யார் வைத்து இருக்கிறார்களோ அந்த ஆடியோ நிறுவனத்திடம் இருந்து அந்தத் தயாரிப்பாளர் வாங்கி இருக்கலாம்.

chitra lakshmanan
ஆனாலும் அந்தப் பாடல்களுக்கு இசை அமைத்தது இளையராஜா தான். அவரை ஒருமுறை சந்தித்து உங்கள் பாடல்களைப் பயன்படுத்தி இருக்கோம்னு அந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் சொல்றதுல என்ன பிரச்சனைன்னு தெரியல என்கிறார் சித்ரா லட்சுமணன்.
குட்பேட் அக்லியில் இளமை இதோ இதோ பாடலும், ஒத்த ரூபா தாரேன் பாடலும் இளையராஜாவின் இசையில் வந்து அசத்தின. இந்தப் பாடல் படத்தில் வரும்போது ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளிக்குதித்தனர். அஜித் இளமை இதோ இதோ பாடலுக்கு சூப்பராக பைட் பண்ணுவார். அதே போல வில்லன் அர்ஜூன்தாஸ் ஒத்த ரூபா தாரேன் பாடலுக்குக் கலக்கலாக டான்ஸ் போடுவார். இந்தப் பாடல்களை முழுவதையும் பயன்படுத்தி இருந்ததுதான் ஆச்சரியம்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

