‘தனுஷ் 56’ அப்டேட்: ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம்

தனுஷ் படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘பைசன்’ படத்துக்குப் பிறகு, மாரி செல்வராஜ் அடுத்து இயக்கவுள்ள படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்கவுள்ளார். இது தனுஷ் நடிப்பில் உருவாகும் 56-வது படமாகும். தற்போது இப்படத்தின் இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இதனை தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தி இருக்கிறார்.

மேலும், தனுஷ் – மாரி செல்வராஜ் – ஏ.ஆர்.ரஹ்மான் இணையும் படத்துக்கு முன்பாக தனுஷை வைத்து புதிய படமொன்றை தயாரிக்கவுள்ளது வேல்ஸ் நிறுவனம். இப்படத்தினை ‘போர் தொழில்’ இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்கவுள்ளார். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது. இதனை முடித்துவிட்டு தான் மாரி செல்வராஜ் படத்தினை தொடங்கவுள்ளார் தனுஷ்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.