Amir-Pavani: நீயும் நானும் சேர்ந்தே செல்லும் தூரமே... அமீர்- பவானி திருமணம்; குவியும் வாழ்த்துகள்

தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் காதலிக்கத் தொடங்கிய அமீர்- பாவனி ஜோடிக்கு இன்று (ஏப்ரல் 20) திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. 

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி சீரியலில் கதாநாயகியாக நடித்தவர் பாவனி. அதன் பிறகு பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானார்.  அதே பிக்பாஸ் சீசன் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு போட்டியாளராகக் கலந்துகொண்டவர்  டான்ஸ் மாஸ்டர் அமீர்.

அமீர்- பவானி திருமணம்

இருவரும் காதலித்து வந்தநிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு பாவனி தனது இன்ஸ்டாகிராமில், அமீருடன் கை கோர்த்தபடி இருக்கும் வீடியோவை வெளியிட்டு திருமண தேதியை அறிவித்திருந்தார்.

இந்நிலையில் அமீர்- பாவனிக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்திருக்கிறது. ப்ரியங்காவும் அவரது கணவரும் திருமணத்தில் கலந்துகொண்டிருக்கின்றனர்.

அமீர்- பவானி திருமணம்
அமீர்- பவானி திருமணம்

அமீர்- பாவனியின் திருமணப்புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. பலரும் இந்த ஜோடிக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.