சூர்யா மட்டுமல்ல சிக்ஸ்பேக்கால் கோலிவுட்டில் ஹிட்டடித்த ஹீரோக்கள்… இவர்தான் மிரட்டிவிட்டாரு!

Kollywood: சூர்யா நடிப்பில் வெளியான ரெட்ரோ திரைப்படத்தில் சிவகுமார்  பேசும்போது தமிழ் சினிமாவில் முதன்முறையாக சிக்ஸ்பேக் வைத்து நடித்த நடிகர் சூர்யா மட்டுமே. அவருக்குப் பின்னால் தான் பல நடிகர்கள் சிக்ஸ் பேக் வைத்து நடித்தார்கள் எனப் பேசி இருக்கிறார். அப்படி சிக்ஸ் பேக் வைத்த நடிகர்களின் தொகுப்புகள்.

வாரணம் ஆயிரம் முதலில் தொடங்கப்பட்டாலும் அதே ஆண்டு ராஜசேகர் இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சத்யம் படத்திலே சிக்ஸ் பேக்குடன் நடித்தார் விஷால். அதை தொடர்ந்து நான்கு ஆண்டுகள் கழிந்து 2012 ஆண்டு மதகஜராஜா படத்திலும் சிக்ஸ் பேக்கில் நடித்தார்.

சீயான் விக்ரம் தன்னுடைய ஐ படத்தில் பாடி பில்டராக நடித்திருந்ததால் அவரும் அப்படத்தில் சிக்ஸ் பேக் வைத்து அசத்தினார். சுள்ளான் என்ற செல்ல பெயரால் அழைக்கப்பட்டும் வரும் தனுஷ் தன்னுடைய வேலையில்லா பட்டதாரி மற்றும் பொல்லாதவன் படத்தில் சிக்ஸ் பேக்குடன் நடித்தார்.

மகிழ் திருமேனியின் வெற்றி படமான தடையற்க தக்க படத்தில் அருண் விஜய் சிக்ஸ்பேக் வைத்து நடித்தார். ஜாலி நடிகரான ஆர்யா தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். இவர் பா. ரஞ்சித் இயக்கத்தில் முரட்டுத்தனமான சிக்ஸ் பேக்கில் நடித்தார்.

அதுமட்டுமல்லாமல் கடம்பன் படத்திலும், அடுத்து வர இருக்கும் மிஸ்டர் எக்ஸ் படத்திலும் சிக்ஸ் பேக்கில் நடிக்க இருக்கிறார். இயக்குனர் சசி இயக்கத்தில் 555 படத்தின் கிளைமேக்ஸிற்காக பரத் முறையாக அசரவைக்கும் வகையில் சிக்ஸ்பேக் வைத்தார்.

இரும்புக்குதிரை படத்திற்காக சிக்ஸ்பேக்கில் நடித்தார் அதர்வா. இவர்களில் ஆச்சரிய பேக்கேஜ் என்றால் அது சூரிதான். பொன்ராம் இயக்கத்தில் சீமராஜா படத்தில் சிக்ஸ்பேக்குடன் களமிறங்கி ஆச்சரியப்படுத்தினார். கலக தலைவன் படத்தில் உதயநிதிக்கு வில்லனாக நடித்த ஆரவும் சிக்ஸ் பேக்கில் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.