திரில்லிங் மூவி டென் ஹவர்ஸ் சிபிக்குக் கைகொடுத்ததா? முதல் நாள் வசூல் இவ்ளோதானா?

Ten hours collection: 10மணி நேரத்துக்குள் நடந்து முடிகிற கதையை 2 மணி நேரத்துக்குள் எடுத்திருக்கிறார்கள்.சிபிராஜ் உடன் இணைந்து கஜராஜ், ஜீவா ரவி, திலிபன், ராஜ் அய்யப்பா, தங்கதுரை, சரவணன் சுப்பையா உள்பட பலர் நடித்துள்ளனர்.

காவல் துறை ஆ ய்வாளராக சிபிராஜ் அற்புதமாக நடித்துள்ளார். சிபிராஜூக்கு அவரது உயரத்துக்கும், எடைக்கும் ஏற்ற வேடம். அருமையான நடிப்பு. அவர் வழக்கம்போல வித்தியாசமான கதைகளத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார். பர்ஸ்ட் ஒரு கேஸ் வருது. அதுல காலேஜ் பொண்ணு காணாமப் போறாங்க.

அடுத்து ஒரு கேஸ் வருது. அதுல ஆம்னி பஸ்ல போற ஒரு பெண் தாக்கப்படுகிறாள். இந்த ரெண்டு கேஸ்சுமே சிபிராஜிக்குத் தான் வருது. படத்துக்கு எஸ்.கே.சுந்தரமூர்த்தி இசையை அள்ளித் தெளித்திருக்கிறார்.

சில இடங்களில் தெளிக்க வேண்டிய இடத்தில் தெளிக்காமல் இசை வேறு எங்கோ போகிறது. படம் முழுக்க ஒரே நைட்ல நடக்குற கதை. திரைக்கதையில் சில இடத்தில் பிரச்சனை. ஆனாலும் பரபரப்புக் குறையாமல் ஹாலிவுட் பாணியில் படத்தை சீக்கிரமாகவே முடித்து விடுகிறார் இயக்குனர் இளையராஜா கலியப்பெருமாள்.

படத்துல கொலையாளி யாருன்னு கண்டுபிடிக்க அங்கங்கே டுவிஸ்ட் வச்சிருக்காரு. படத்துல செல்பி எடுக்குற இளைஞன் உள்பட சில தேவையில்லாத காட்சிகள் படத்தின் விறுவிறுப்புக்குத் தடையாக உள்ளன. படத்தில் யதார்த்தம் இல்லாததுதான் மைனஸ். பல இடங்களில் லாஜிக் மீறல்கள். வில்லனுக்கு வெயிட்டே இல்லை.

கிரைம் திரில்லர் படங்களை விரும்பிப் பார்ப்பவர்கள் இந்தப் படத்தையும் பார்க்கலாம். ரொம்பவும் எதிர்பார்த்துப் போனீங்கன்னா அது ஏமாற்றம்தான் தரும். சும்மா ஜாலியா போய் படத்தைப் பார்க்கலாம். படத்தின் முதல் நாள் வசூல் என்னன்னு பாருங்க.

இந்திய அளவில் 22 லட்சம் வசூலித்துள்ளது. உலகளவில் 25 லட்சம் வசூலித்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.