சம்பவம்னா இதுதான்.. 200 கோடியை நெருங்கிய குட் பேட் அக்லி.. பட நிறுவனம் அறிவிப்பு
Good Bad Ugly: ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்த குட் பேட் அக்லி திரைப்படம் மாபெரும் வசூலை பெற்று வருகிறது. ஆக்சன் திரில்லர் படமாக உருவாகிய இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக திரிஷா நடித்திருந்தார். வில்லனாக அர்ஜுன் தாஸ் நடித்திருந்தார். கூடவே பிரசன்னா, யோகி பாபு, தெலுங்கு நடிகர் சுனில் ,ரெடின் கிங்ஸ்லி ஆகியோரும் நடித்திருந்தனர்.
படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். கடந்த பத்தாம் தேதி படம் வெளியாகி உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களிடம் இருந்து பெரும் பாராட்டை பெற்றது. அஜித் கேரியரில் இந்த படம் பெரிய அளவில் பேசப்பட்டது .படம் வெளியான முதல் நான்கு நாட்களில் 148 கோடி வசூலித்திருப்பதாக சொல்லப்பட்டது .தமிழ்நாட்டில் மட்டும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்யப்பட்டது.
அதனால் இரண்டு வார இறுதியில் படம் கண்டிப்பாக எதிர்பார்த்த வசூலையும் தாண்டி மாபெரும் வசூலை பெறும் என ஒட்டுமொத்த கோடம்பாக்கமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது படத்தின் தயாரிப்பு நிறுவனமான மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் குட் பேட் அக்லி படத்தின் வசூல் நிலவரத்தை அறிவித்திருக்கிறார்கள்.

உலக அளவில் இந்த படம் தற்போது வரை 200 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. அஜித் கெரியரிலேயே அதிகமான வசூலை பெற்ற திரைப்படமாக இது பார்க்கப்படுகிறது. தமிழ் தெலுங்கு ஹிந்தி கன்னடம் மற்றும் மலையாளம் என பல மொழிகளில் வெளியிடப்பட்ட அந்த படம் அதிரடி காட்சிகள் மற்றும் அஜித்தின் அசத்தலான நடிப்பு ஆகியவற்றால் படம் வேறொரு தளத்தை நோக்கி நகர்ந்தது.
இதுவரை இல்லாத அஜித் படமாக இந்த படம் முழுக்க முழுக்க ரசிகர்களுக்கான படமாக அமைந்தது. படத்தில் கதை என்பதையும் தாண்டி சீனுக்கு சீன் விறுவிறுப்பான ஒரு ஸ்கிரீன் ப்ளேவை ஆதிக் வைத்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் சீட்டின் நுனியில் உட்கார வைத்தார் என்று தான் சொல்ல வேண்டும்.இன்னும் சனி ஞாயிறு ஆகிய நாட்கள் விடுமுறை தினம் என்பதால் திங்கள்கிழமை இதனுடைய வசூல் இன்னும் எகிரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

