OTT Watch: லிஜோமோலிடம் மோதும் லாஸ்லியா… படமா இது? ஜென்டில் வுமன் படம் எப்படி இருக்கு?

OTT Watch: லிஜோமோல் ஜோஸ் மற்றும் லாஸ்லியா நடிப்பில் வெளியாகி இருக்கும் திரைப்படம் ஜென்டில்வுமன். மீண்டும் பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்டு இருக்கும் கதை எப்படி இருக்கிறது என்ற தொகுப்பு.

அரவிந்த் என்ற சாதாரண மனிதனுக்கு பூர்ணி என்ற மனைவி. அவர் பிடிக்காமல் திருமணம் செய்துக்கொண்டாலும் தன் கணவருக்கு பிடித்த எல்லாவற்றையுமே செய்கிறார். ஆனால் அரவிந்த் சபல புத்தி உடையவர். அவருக்கு அன்னா என்ற ஆர்டிஸ்ட்டுடன் கள்ளக்காதல்.

ஒரு கட்டத்தில் இது மனைவிக்கு தெரிய அவர் கணவரை கொலை செய்து விடுகிறார். கள்ளக்காதலியோ என்ன இவர் ஆளையே காணும் என பல நாட்கள் கழித்து வீட்டுக்கே வருகிறார். அவருக்கு வீட்டில் சரியாக எந்த தகவலும் வராமல் போக போலீஸ் புகார் கொடுக்கிறார். அதற்கு பிறகு கதை சூடு பிடிக்கிறது.

இதில் பூர்ணி கேரக்டரில் லிஜோமோல் நடித்திருப்பதால் எந்த சந்தேகமும் இல்லாமல் அசத்தி இருக்கிறார். சாந்தமான முகத்துடன் கோபத்தை கூட அட்டகாசமாக காட்டி இருக்கிறார். ஒரு வழியாக லாஸ்லியா நடிக்கும்படி ஒரு படம். பரவாயில்லை ரகத்துக்கு தேறிவிட்டார்.

தமிழில் நிறைய படங்களில் துணை கதாபாத்திரம் செய்த ஹரி கிருஷ்ணாவுக்கு அரவிந்த் வேடம் சரியாக அமைந்துள்ளது. பெண்களுக்கு எதிரான பிரச்னையை ஆண் இயக்குனரான ஜோசுவா சேதுராமன் பேசி இருப்பது தான் பெரிய ஆச்சரியமான விஷயமாக பார்க்க முடிகிறது.

மெதுவாக திரைக்கதை நகர்வதால் பலருக்கு அழுப்பு தட்டலாம். ஆனால் அடுத்து என்ன நடக்கும் என்ற எதிர்பார்ப்பு படத்தின் மீதான ஆர்வத்தை பிடித்து வைக்கிறது. முக்கியமாக இப்படத்தில் யுகபாரதியின் வசனங்கள் பல இடங்களில் நச்சென்று இருக்கிறது. 

பொதுவாக மலையாள படம் என்பதால் பின்னணி இசை தான் கூடுதல் பலம் என்பது இப்படத்துக்கு சாட்சியாக அமைந்துள்ளது. இருந்தும் படம் 2 மணி நேரம் நீளம் என்பது இக்கதைக்கு அவசியம் இல்லை என்றே கூறலாம். ஆனால் கொடுக்கப்பட்ட கேரக்டரின் மாற்றங்கள் ஒவ்வொரு நேரமும் வித்தியாசமாக மாற்றி அமைக்கப்படுவதற்கு இவ்வளவு நிமிடம் தேவைப்பட்டு இருக்கலாம்.

சில சிக்கல்கள் இருந்தாலும் மலையாள சினிமாவின் அடிப்பொலி ஜானரான ஸ்லோ பர்ன் திரில்லரில் இப்படமும் மாஸ் காட்டி இருக்கிறது. டெண்ட் கொட்டா ஓடிடியில் மிஸ் பண்ணாம இந்த வாரம் படத்தை பார்த்துடுங்கப்பா.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.