போதையில் உச்சம்.. ஷூட்டிங்கில் நடிகைக்கு பாலியல் தொல்லை அளித்த ‘குட் பேட் அக்லி’ பட நடிகர்..!

மலையாளத்தில் ‘விக்ருதி’, ‘பீமன்டே வழி’, ‘ஜன கண மன’, ‘சௌதி வெல்லக்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகை வின்சி அலோஷியஸ், 2023-ல் வெளியான ‘ரேகா’ மலையாள படத்தில் நடித்து, சிறந்த நடிகைக்கான கேரள அரசின் விருதை பெற்றார். இவர் அண்மையில் பாலியல் துன்புறுத்தல் குறித்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் கேரளாவில் நடந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வின்சி, “இனி நான் போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர்களுடன் நடிக்க மாட்டேன். யாராவது போதைப்பொருள் பயன்படுத்தும் நடிகர் என்று அறிந்தால், அவர்களுடன் ஒருபோதும் எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன்” என்று பகிரங்கமாக அறிவித்தார்.

அவரது இந்தப் பேச்சு சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியது. இதை தெளிவுபடுத்துவதற்காக வின்சி வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்தார். அந்த விளக்கத்தில் தனக்கு நேர்ந்த பகீர் சம்பவத்தை வெளிப்படுத்தினார்.

அதில், “ஒரு படத்தில் முன்னணி நடிகருடன் பணியாற்றிய போது, அவர் போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தார். அவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் அணிந்த ஆடையை சரி செய்வதாக கூறிய போது, ‘நானும் உங்களுடன் வருகிறேன். நீங்கள் ரெடியாக நான் உதவி செய்கிறேன்’ என கூறி சங்கடப்படுத்தினார்” என்று கூறியுள்ளார்.

அதன்பின், “படப்பிடிப்பு தளத்தில் அவர் வாயிலிருந்து வெள்ளையாக ஏதோ ஒன்று டேபிளில் சிந்தியது. அப்பொழுது அவர் போதைப்பொருள் பயன்படுத்தியதை உறுதிசெய்தேன். இது சுற்றியிருந்தவர்களுக்கு தொந்தரவை ஏற்படுத்தியது. இதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படி ஒருவருடன் பணியாற்ற விரும்பவில்லை. என்னுடைய இந்த முடிவால் சில பட வாய்ப்புகள் பறிபோனாலும், அப்படியானவர்களுடன் வேலை செய்வதில் ஆர்வமில்லை” என்றார்.

இதையடுத்து அந்த நடிகர் யார் என்பதை மலையாள நடிகர் சங்கமான அம்மாவில் உள்ள நிர்வாகிகளை சந்தித்து கூறியிருக்கிறார் வின்சி. அந்த நடிகர் வேறு யாருமல்ல, விஜயின் ‘பீஸ்ட்’, அஜித்தின் ‘குட் பேட் அக்லி’யில் நடித்த ஷைன் டாம் சாக்கோ தான் என்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் வெளிவந்த ‘குட் பேட் அக்லி’ திரைபபடத்தில் அஜித்தின் வெளிநாட்டு சம்பவங்களை வில்லன் அர்ஜுன் தாஸிடம் எடுத்துக் கூறும் சண்முகம் என்கிற கேங்ஸ்டராக நடித்திருப்பார். இவர் தான் வின்சிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தார் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.