முதன் முறையாக ஹாரர் கதையில் ராஷ்மிகா!

தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார் ராஷ்மிகா மந்தனா. இந்தியில் அவர் நடித்து வெளியான ‘ஜாவா’ வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து இந்தியில் கவனம் செலுத்தி வரும் அவர், முதன்முறையாக ஹாரர் படத்தில் நடிக்கிறார். ஆதித்யா சர்போத்தர் இயக்கும் இதில் ஆயுஷ்மான் குரானா நாயகனாக நடிக்கிறார்.

பரேஸ் ராவல், நவாஸுதீன் சித்திக் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு ‘தாமா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. ஸ்த்ரீ, ஸ்த்ரீ 2 உள்ளிட்ட ஹாரர் படங்களைத் தயாரித்த மேட்காப் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் படப்பிடிப்பு புகைப்படத்தை வெளியிட்டுள்ள ராஷ்மிகா, இன்னும் சில நாட்கள் இரவு நேரப் படப்பிடிப்பு இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.