இருவரும் ஒரே ஊர்; காதல் கல்யாணம் செய்தவங்கதான்; சீரியல் நடிகர் ஐயப்பன் - மனைவி இடையே என்ன பிரச்னை?

சீரியல் நடிகர் ஐயப்பனின் மனைவி விந்தியா இரு தினங்களுக்கு முன் ஷூட்டிங் ஸ்பாட் சென்று அவரைச் சந்திக்க முயன்றது, அங்குள்ளவர்கள் அவரை அனுமதிக்க மறுத்தது, தொடர்ந்து ஐயப்பன் குறித்து மீடியா முன் சில குற்றச்சாட்டுகளை அவர் வைத்தது ஆகிய இந்தச் சம்பவங்கள் எல்லோரும் அறிந்ததே.

வீட்டுக்கு வருவதில்லை, தன்னையும் மகளையும் கவனிப்பதில்லை,, செலவுக்கு பணம் தருவதில்லை. போதாக்குறைக்கு குடித்துவிட்டு அடிக்கிறார், மகளை மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார், பொருட்களைச் சேதப்படுத்துகிறார் எனப் பல குற்றச்சாட்டுகளை ஐயப்பன் மீது சுமத்தியிருந்தார் விந்தியா.

சீரியல் நடிகர் ஐயப்பன்,, அவரது மனைவி விந்தியா

தொடர்ந்து போலீசிலும் அவர் ஐயப்பன் மீது புகார் அளித்திருப்பதாகக் கூறப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக ஐயப்பன் தரப்பு கருத்தை அறிய நாம் முயன்ற போது அவர் பேச மறுத்து விட்டார். எனவே அவரின் நண்பர்கள் சிலரிடம் என்ன நடந்தது என பேசினோம்.

ஐயப்பன் சொந்த ஊர் ஊட்டி. அவர் மனைவியுமே அந்த ஊர்தான். ரெண்டு பேரும் காதலிச்சு கல்யாணம் செய்துகிட்டவங்கதான். இந்தத் தம்பதிக்கு ஒரு மகள் உண்டு. ரெண்டு பேரும் கல்யாணம் செய்துகொண்ட சமயத்துல விந்தியா ஐ.டி. வேலை பார்த்துட்டு இருந்தாங்க. பிறகு ஒரு கட்டத்துல வேலையை விட்டுட்டதாச் சொன்னாங்க.

இடையில ஐயப்பனுக்கு டிவியில வாய்ப்புகள் கொஞ்சம் குறைஞ்ச சமயத்துல மனைவியையும் மகளையும் ஊட்டியில விட்டுட்டு இவர் மட்டும் சென்னையில இருந்து நடிச்சிட்டிருந்தார். இந்த சமயத்துலதான் ரெண்டு பேருக்குமிடையில் பிரச்னை ஆரம்பமாகியிருக்கு. பொருளாதார ரீதியா சிரமமா இருந்ததால் விந்தியாவை வேலைக்குப் போகச் சொல்லி இவர் சொன்னதாகவும் அதுக்கு அவங்க சம்மதிக்கலைன்னும் பேசிக்கிட்டாங்க.

இவர் சம்பாதிக்கிற சம்பாத்தியத்துல சென்னையில் இவருடைய செலவைப் பார்த்துகிட்டு ஊட்டியில இருக்கிற இவருடைய பெற்றோர், மனைவி குழந்தைகள்னு கவனிக்க வேண்டியதிருந்ததால் ரொம்பவே சிரமப்பட்டார்.

இதனால் கணவன் மனைவிக்கிடையில் அடிக்கடி பிரச்னை உண்டாச்சு. அதனால் ஒரு கட்டத்துல மனைவி குழந்தைகளைப் போய் பார்க்கறதையே தவிர்த்துட்டு சென்னையிலேயே இருக்கத் தொடங்கினார்.

ஐயப்பன்

இதனால் சென்னைக்கு கிளம்பி வந்த விந்தியா ஷூட்டிங் ஸ்பாட்லதான் இவரைப் பார்க்க முடியுதுன்னு அங்க கிளம்பி வரத் தொடங்கினாங்க.. அப்படித் தொடங்கின சண்டைதான் இன்னைக்கு மீடியா வரைக்கும் வந்திடுச்சு என்ற ஐயப்பனின் நண்பர்கள் இவ்வளவு பிரச்னைக்கிடையிலும் அய்யப்பன் மனைவிக்குப் பணம் அனுப்பி வந்ததாகவே கூறுகின்றனர்.

விந்தியா தரப்பிலோ ஐயப்பன் தற்போது நடித்து வரும் தொடரில் கமிட் ஆனதிலிருந்துதான் அவருடைய நடவடிக்கையில் மாற்றம் வந்ததாகத் தெரிவிக்கின்றனர்.

இருதரப்பும் போலீசுக்குப் போனதில் தற்போது காவல்துறையினர் நீதிமன்றத்தில் பார்த்துக் கொள்ளுமாறு கூறிவிட்டதாகத் தெரிகிறது.

விந்தியாவோ கணவன் தங்களுடன் சேர்ந்து வாழ வேண்டுமென்றே கோரிக்கை வைக்கிறார். ஐயப்பனோ இனி சேர்ந்து வாழ சாத்தியமில்லை என விவாகரத்து செய்வது தொடர்பான முயற்சிகளைத் தொடங்கியிருக்கிறாராம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.