அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ட்ரெய்லர் எப்படி? - “AK வர்றார் வழிவிடு”
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள குட் பேட் அக்லி’ படத்தில் அஜித், த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு, யோகி பாபு, சைன் டாம் சாக்கோ உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் வரும் ஏப்ரல் 10-ம் தேதி திரை அரங்கில் வெளியாக உள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு வெள்ளிக்கிழமை (ஏப்.04) வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - பல வருடங்களுக்குப் பிறகு அஜித்துக்கு ஒரு ரகளையான ட்ரெய்லர். கலர் புல்லாக அர்ஜுன் தாஸின் நடனத்துடன், பின்னணியில் ‘ஒத்த ரூபா தாரேன்’ பாடலுடன் தொடங்கும் ட்ரெய்லர் முழுக்கவே சரவெடிதான். படம் கண்டிப்பாக அஜித் ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட் ஆக இருக்கும் என்பதை ட்ரெய்லரில் கணிக்க முடிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
