சன்ரைசர்ஸ் ஹைதராபாத்துடன் இன்று பலப்பரீட்சை: 2-வது வெற்றியை பெறுமா டெல்லி கேபிடல்ஸ்?
விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு விசாகப்பட்டினத்தில் நடைபெறும் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.
பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நடப்பு சீசனை வெற்றிகரமாக தொடங்கியது. ராஜஸ்தான் அணிக்கு எதிரான முதல் ஆட்டத்தில் 286 ரன்கள் வேட்டையாடிய ஹைதராபாத் அணி 44 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டிருந்தது. ஆனால் அடுத்த ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியிடம் 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டிருந்தது. இந்த ஆட்டத்திலும் ஹைதராபாத் அணி 190 ரன்கள் குவித்திருந்தது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


