ஐபிஎல் 2025: முதல் வெற்றியை பதிவு செய்தது குஜராத்.. தொடரும் மும்பையின் சோகம்..!

ஐபிஎல் போட்டிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், நேற்றைய போட்டியில் குஜராத் அணி மும்பையை வீழ்த்தி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில், மும்பை அணி இதுவரை விளையாடிய இரண்டு போட்டிகளிலும் தோல்வி அடைந்து சோகத்தில் மூழ்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

நேற்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி 20 ஓவர்களில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் எடுத்தது. தொடக்க ஆட்டக்காரர் சுதர்சன் 63 ரன்கள் எடுத்தார். இதனை அடுத்து, 197 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய மும்பை அணியின் ரோகித் சர்மா வழக்கம் போல் ஏமாற்றிய நிலையில், சூரியகுமார் யாதவ் மட்டும் ஓரளவு நிலைத்து விளையாடி 48 ரன்கள் எடுத்தார்.

 

இருப்பினும், அந்த அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 160 ரன்கள் மட்டுமே எடுத்ததால், குஜராத் அணி 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்திய பிரசித் கிருஷ்ணா ஆட்டநாயகன் விருது பெற்றார்.

 

இதனை அடுத்து, புள்ளிப் பட்டியலில் குஜராத் அணி மூன்றாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. முதல் இரண்டு இடங்களில் பெங்களூரு மற்றும் லக்னோ அணிகள் உள்ளன. நேற்றைய தோல்வியின் காரணமாக, மும்பை அணி ஒன்பதாவது இடத்தில் உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

இந்த நிலையில், இன்று டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியும், ராஜஸ்தான் மற்றும் சிஎஸ்கே அணிகளுக்கு இடையிலான போட்டியும் நடைபெற உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

 

Edited by Siva

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.