ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, வீட்டு மனை... எது வேண்டும்? - மூன்றில் ஒன்றை தேர்வு செய்ய வினேஷ் போகத்துக்கு வலியுறுத்தல்
சண்டிகர்: ரூ.4 கோடி பரிசு, அரசு வேலை, இலவச வீட்டு மனை இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேர்வு செய்யுமாறு மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத்தை ஹரியானா அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
காமன்வெல்த், ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பதக்கம் வென்ற வினேஷ் போகத் கடந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றார். ஆனால், அரை இறுதிப் போட்டியின் கூடுதல் எடை காரணமாக அவர், தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து மல்யுத்தத்திலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்த வினேஷ் போகத், கடந்த ஆண்டு நடைபெற்ற ஹரியானா சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி கண்டார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


