தனித்தனியாக வாழ்ந்த பாரதிராஜா.. மனைவி.. மனோஜ்.. குடும்பத்தில் என்ன பிரச்சனை?!…
Manoj Bharathiraja: பதினாறு வயதினிலே படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்கியவர் பாரதிராஜா. கிராமத்து வாழ்க்கை, கிராமத்து மனிதர்கள், கிராமத்து மனிதர்களின் காதல், மோதல், சாதி பாகுபாடு, மதப்பிரச்சனை என எல்லாவற்றையும் தனது படங்களில் பிரதிபலித்தவர். சினிமா உலகம் இவரை இயக்குனர் இமயம் என அழைத்தது.
பல புதிய நடிகர், நடிகைகளை சினிமாவில் அறிமுகம் செய்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியிருக்கிறார். தமிழ் சினிமா உலகம் இவருக்கு கடமைப்பட்டிருக்கிறது. இவரின் மகன் மனோஜ் 48 வயதே ஆன நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு கடந்த 25ம் தேதி திடீரென மரணமடைந்தார். அவரின் மறைவு திரையுலகிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுவும் 83 வயதில் தள்ளாடும் வயதில் பாரதிராஜாவுக்கு இப்படி வலியை காலம் கொடுத்திருக்கிறது. நேற்று மாலை மனோஜின் உடல் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில்தான் பாரதிராஜா மற்றும் மனோஜ் பற்றிய பல விஷயங்கள் வெளியே தெரிய வந்திருக்கிறது. மனோஜ் மரணம் கேள்விப்பட்டு நீலாங்கரையில் இருக்கும் தனது வீட்டிலிருந்து மனோஜ் வசிக்கும் சேத்துப்பட்டு வீட்டுக்கு ஓடி வந்தார் பாரதிராஜா.
அதேபோல், மகன் இறந்த செய்தி கேள்விப்பட்டு நீலங்கரை வீட்டுக்கு பாரதிராஜாவின் அம்மா தனியாக காரில் வந்தார். அதாவது, பாரதிராஜா, அவரின் மனைவி சந்திரலீலாவதி, மகன் மனோஜ் ஆகிய மூவரும் தனியாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பாரதிராஜாவும் அவரின் மனைவியும் பல வருடங்களாக பிரிந்தே வாழ்ந்திருக்கிறார்கள்.

அதேபோல், மனோஜும் தனியாக தனது மனைவி, மகள்களுடன் தனியாக வசித்து வந்திருக்கிறார். மனோஜின் சகோதரி ஜனனி அமெரிக்காவில் தனியாக வசித்து வருகிறார். பாரதிராஜாவுக்கும் அவரின் மனைவிக்கும் என்ன பிரச்சனை, மனோஜ் ஏன் அம்மா, அப்பாவை தனித்தனியாக விட்டுவிட்டு தனியாக வசித்து வந்தார் என்பதற்கெல்லாம் காரணம் தெரியவில்லை. அவர்களுக்குள் ஏதோ கருத்து வேறுபாடு இருந்திருக்கிறது என்பதை மட்டும் புரிந்துகொள்ள முடிகிறது. அதேநேரம் மகன் மனோஜ் மீதும், அவரின் குழந்தைகள் மீதும் மிகுந்த அன்பு கொண்டவராகவே பாரதிராஜா இருந்திருக்கிறார் என்பது சில வீடியோக்களை பார்க்கும்போது புரிகிறது.
ஒருவேளை எல்லோரும் ஒரே வீட்டில் அன்போடு வாழ்ந்திருந்தால் மனோஜுக்கு மன அழுத்தம் அதிகரித்திருக்க வாய்ப்பில்லை. அவரின் கடைசி நிமிடங்களில் அவரின் அப்பாவும், அம்மாவும் அருகே இல்லை. கோடிகளில் பணம் இருந்தும் ஒன்றாக வாழாமல் நிறைய மன அழுத்தத்தில் மனோஜ் இருந்திருக்கிறார். அதுவே அவரின் உயிரையும் பறித்துவிட்டது என்றுதான் கருதவேண்டும்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


