Serial Update: கர்ப்பமானதை அறிவித்த சின்னத்திரை ஜோடி; மீண்டும் வில்லியாகக் களம் இறங்கும் ஃபரீனா!

சன் டிவியில் தொகுப்பாளராகப் பரிச்சயமானவர் அஷ்வத். இவருக்கும் சின்னத்திரை நடிகை கண்மணிக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றிருந்தது.

இந்த தம்பதி பெற்றோர்கள் ஆக இருக்கும் செய்தியை அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

அஷ்வத் - கண்மணி

அஷ்வத் - கண்மணி பேபி மூன் கொண்டாடுவதற்காகச் சிங்கப்பூர் சென்றிருக்கிறார்கள். அங்கே வைத்து கர்ப்பமாக இருப்பதை அவர்களுடைய ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்கள்.

அந்த காணொளியைக் கண்மணி அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 

அதில், " `Meet our Gen Beta baby soon! எங்களுடைய புதிய அத்தியாயம் இப்போது தொடங்குகிறது!" எனக் குறிப்பிட்டிருக்கின்றனர். 

அவர்களுக்குச் சின்னத்திரை நடிகர்கள் உட்படப் பலர் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

View this post on Instagram

A post shared by Kanmani manoharan (@kanmani_manoharan)

சன் டிவியில் புதியதாக வரவிருக்கும் தொடர் ஒன்றில் நடிகை ரேஷ்மா நடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜீ தமிழில் `நெஞ்சத்தைக் கிள்ளாதே தொடரில் சமீபத்தில் நடித்திருந்தார்.

அந்தத் தொடர் விரைவில் முடிவடைந்தது தொடர்பாக சமூக வலைத்தளப் பக்கங்களில் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. 

ரேஷ்மா

இந்நிலையில் ரேஷ்மா தற்போது ஜீ தமிழிலிருந்து சன் டிவிக்கு என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

இவருக்கு ஜோடியாக நடிகர் ஜிஷ்ணு மேனன் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

விரைவிலேயே இது குறித்த அதிகாரப்பூர்வமான தகவல்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.

விஜய் டிவியில் ஒளிபரப்பான `பாரதி கண்ணம்மா தொடரின் மூலம் வில்லியாக எல்லாருக்கும் பரிச்சயமானவர் ஃபரீனா அசாத்.

அந்தத் தொடருக்குப் பிறகு வெப் சீரிஸில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தவர் தற்போது மீண்டும் சின்னத்திரை பக்கம் என்ட்ரி கொடுத்திருக்கிறார்.

ஃபரீனா அசாத்

`இதயம் 2 தொடர் தொடங்கியிருக்கிறது. `உப்பு புளி காரம் வெப் சீரிஸிற்குப் பிறகு ஃபரீனா அசாத் இந்தத் தொடரில் நடிக்கிறார்.

`வெண்பா மாதிரியான நெகட்டிவ் கதாபாத்திரத்தில்தான் இந்தத் தொடரிலும் நடிக்கிறார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : https://tinyurl.com/Vettai-Naigal-Part-01 |

Part 02: https://tinyurl.com/Vettai-Naigal-Part-02 |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.