அல்லு அர்ஜூனுடன் நடிக்க முடியாது… புஷ்பா 2 படத்தினை நிராகரித்த முக்கிய பிரபலங்கள்…!

Pushpa2: பேன் இந்தியா படங்களில் முக்கிய சூப்பர்ஹிட்டான புஷ்பா2 படத்தில் நடிக்க முடியாது என மறுத்து இருக்கும் தகவல் கசிந்துள்ளது.

சுகுமார் இயக்கத்தில் ​’புஷ்பா 2: த ரூல்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியான பேன் இந்தியா படமாக அமைந்தது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தன்னா, ஃபஹத் ஃபாசில், ஜகபதி பாபு, சுனில் மற்றும் ராவு ரமேஷ் ஆகியோரும் நடித்துள்ளனர்.  முதல் பாகம் மிகப்பெரிய சூப்பர்ஹிட் கொடுத்தால் இரண்டாம் பாகம் பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியது. 

இந்த படத்தின் கதை, சந்தனக்கட்டை கடத்துபவரின் வாழ்க்கையை மையமாக வைத்து அமைக்கப்பட்டுள்ளது. அவரை எதிர்க்க வரும் எஸ்.பி. பன்வார் சிங் ஷேகாவத் கேரக்டரில் ஃபஹத் ஃபாசில் பட்டையை கிளப்பி நடத்தி இருந்தார். படம் வசூல் 2000 கோடியை நெருங்கியது.

Also Read:  உடைந்த ரோகிணியின் உண்மை… அதிர வைக்கும் சிறகடிக்க ஆசை புரோமோ!

இந்த படம் பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை உருவாக்கி, இந்தியாவின் மிக அதிக வசூல் செய்த திரைப்படமானது. மேலும், இது ஆண்டின் மிக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமாகவும், இரண்டாவது மிக அதிக வசூல் செய்த தெலுங்கு திரைப்படமாகவும், உலகளவில் மூன்றாவது மிக அதிக வசூல் செய்த இந்திய திரைப்படமானது.

இந்நிலையில் இப்படம் ஒரு சூப்பர்ஹிட் திரைப்படமான புஷ்பா 2வில் நடிக்க கூட பிரபலங்கள் மறுத்து இருக்கின்றனர். அல்லு அர்ஜூனின் புஷ்பா கேரக்டருக்கு மகேஷ் பாபுவை கேட்டு இருக்கின்றனர். ஆனால் அவர் தன்னால் முடியாது என மறுத்துவிட்டார்.

Samantha VJS

அதுமட்டுமல்லாமல் ஸ்ரீவல்லி கேரக்டருக்கு முதலில் கேட்டது சமந்தாவை தானாம். ஆனால் கால்ஷீட் பிரச்னையால் அவரால் நடிக்க முடியாமல் போக அவருக்கு பதில் தான் ராஷ்மிகா உள்ளே வந்து இருக்கிறார். இதுமட்டுமல்லாமல் வில்லன் வேடத்தில் விஜய் சேதுபதியிடம் பேச அவர் வில்லனாக முடியாது என மறுத்துவிட்டாராம். 

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.