ஹாட்ரிக் வெற்றியை கொடுக்க வரும் கூட்டணி.. ராட்சசன், முண்டாசுப்பட்டி வரிசையில் அடுத்த பட டைட்டில்
முண்டாசுப்பட்டி, ராட்சசன் போன்ற படங்களின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் விஷ்ணு விஷால், ராம்குமார் மற்றுமொரு படத்தில் இணைந்துள்ளனர். அந்த படத்தின் போஸ்டர் மற்றும் டைட்டில் இன்று வெளியாகி உள்ளது. விஷ்ணு விஷால் நடிப்பில் மிகுந்த வரவேற்பை பெற்ற திரைப்படமாக முண்டாசுப்பட்டி திரைப்படம் அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு ராம்குமார் சில ஆண்டுகள் படங்களை இயக்காமலேயே இருந்தார்.
அதன் பிறகு மீண்டும் விஷ்ணு விஷாலை வைத்து ராட்சசன் திரைப்படத்தை கொடுத்தார். அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த படத்திற்கு முன்பு வரை விஷ்ணு விஷாலை ரசிகர்கள் அந்த அளவு கண்டு கொள்ளவே இல்லை என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் ராட்சசன் திரைப்படம் தான் அவருக்கு ஒரு பெரிய திருப்புமுனையாக அமைந்தது.
அந்த படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் மக்கள் மத்தியில் நல்ல ஒரு வரவேற்பை பெற்றார் விஷ்ணு விஷால். அதன் பிறகு அவருக்கு ஒரே ஏறுமுகம் என்றுதான் சொல்ல வேண்டும். சமீபகாலமாக விஷ்ணு விஷால் நல்ல கதைகளம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் முக்கியமான படமாக கட்டாகுஸ்தி படத்தை சொல்லலாம்.
அந்தப் படமும் மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் மீண்டும் ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஒரு படத்தில் இணைந்துள்ளார். அந்த படத்தின் போஸ்டரும் டைட்டிலும் இன்று வெளியாகி இருக்கிறது. படத்திற்கு இரண்டு வானம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக மமீதா பைஜூ நடிக்கிறார்.
சத்தியஜோதி பிலிம்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு நீண்ட நாட்களாக கொடைக்கானலில் நடைபெற்று வந்தது. சில வாரங்களுக்கு முன்பு தான் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்திற்கு திபு நினன் தாமஸ் இசை அமைக்கிறார். முண்டாசுப்பட்டி, ராட்சசன் என அடுத்தடுத்து வெற்றியை கொடுத்த இந்த கூட்டணி இந்த படத்தின் மூலமும் அடுத்த வெற்றியை கொடுக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ரசிகர்கள் மத்தியிலும் இந்த படத்திற்கு ஒரு பெரிய வரவேற்பு இருக்கிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


