விமர்சகர்களைப் பொளந்து கட்டும் KKKM.படக்குழு... இந்த நேரத்துல இது தேவையா?
கொஞ்சம் காதல் கொஞ்சம் மோதல் (KKKM)படக்குழுவினரான ஸ்ரீகாந்த், இயக்குனர் ரங்கராஜ், நடிகர் ரமேஷ் கண்ணா உள்பட பலர் கலந்து கொண்டு படத்தைப் பற்றிய தகவல்களைத் தெரிவித்தனர். என்ன சொல்றாருன்னு பாருங்க.
இயக்குனர் இந்தப் படத்தைப் பற்றிச் சொல்லும் போது இது குடும்பத்தோடு பார்க்குற மாதிரி வந்துருக்கு. விரசம் என்பது துளியும் இருக்காது. கிரைம் அந்த மாதிரி இதுல இல்ல. கலகலப்பான காமெடியான படத்தை எதிர்பார்க்கலாம் என்கிறார். அதே நேரம் நடிகர் ரமேஷ் கண்ணா இந்தப் படத்தைப் பற்றிச் சொல்கையில், போதைப் பொருள் இல்ல. துப்பாக்கி இல்ல. ரத்தம் இல்ல. ஜாலியா வந்து படத்தைப் பார்க்கலாம். நகைச்சுவை, சின்ன சின்ன சென்டிமென்ட் எல்லாம் இருக்கும் என்கிறார்.
நண்பன் படம் வரும்போது மறுபடியும் ஸ்ரீகாந்த் வேற லெவல்ல வந்துருவாருன்னு எதிர்பார்த்தோம். ஆனா வரலயே ஏன்னு கேட்கிறார் ஆங்கர். அதற்கு ஸ்ரீகாந்த் பதில் சொல்லும்போது, நானும்தான் எதிர்பார்த்தேன்.

வெற்றியும், தோல்வியும் நிரந்தரம் கிடையாது. ஆனா அதுக்கு முயற்சி பண்ணனும். நண்பன் படம் நல்லா தானே இருந்துச்சு. அப்புறம் ஏன் எனக்கு 100கோடி, 10 கோடி, 5 கோடின்னு வேற படம் வரல? என்கிறார். அவரிடம் ஸ்ரீகாந்த் சாரை விதவிதமான கேரக்டர்கள்ல ரசிகர்கள் பார்க்கணும்னு ஆசைப்படுறோங்களோனு கேட்கிறார் ஆங்கர்.
அதற்கு ஸ்ரீகாந்த், கன்டன்ட் எல்லாம் இருக்கு. கதையை நம்பி காசு போடறதுக்குத் தயாரிப்பாளர்கள் வரணும். எல்லாரும் என்ன பண்றாங்க? நடிகருக்கு என்ன பிசினஸ் இருக்கு? என்ன மார்க்கெட் இருக்குன்னு அதை நம்பித்தானே காசு போடறாங்க? விமர்சனம் எடுத்தவங்க தான் படம் எடுத்தாங்க. ஏன் ஓடலை? விமர்சனம் சொல்றது ஈசி. தப்பு கண்டுபிடிக்கிறது ஈசி. அதை இம்ப்ளிமென்ட் பண்றதுதான் கஷ்டம்.
சதுரங்கம் வியாபாரம் ஆகல. ஆனா தரமான படம். அதுக்காக எவ்வளவு மெனக்கிட்டுருக்கோம். நான் வெயில்ல ஓடிருக்கேன். காலில் சப்பல் இல்லாம கொப்பளம் வந்துருக்கு. சம்பளத்துக்கு மேல சம்பளம் வாங்கி திருப்பிக் கொடுத்து அதுக்கு மேலயும் கடன் கொடுத்து அந்தப் படத்தை 5 வருஷம் கழிச்சித்தான் ரிலீஸ் பண்ண முடியுது. அதுல இருந்த ஒவ்வொரு காட்சியையும் பார்த்தவங்க எடுத்து திருடிட்டுப் போய் போடுறாங்க.
எவ்வளவு கஷ்டமா இருக்கும்னு சொல்லுங்க. ரிவியூஸ் ஒரு தனிப்பட்ட நபரோ, குழுவோ கொடுக்குற ஒப்பீனியன்தான். ஆனா ஆடியன்ஸ்க்கு என்ன பிடிக்கறதுதான் முக்கியம். ஒரு படம் நல்லாருக்கா நல்லா இல்லையான்னு ஏன் இன்னொருத்தரு சொல்லிப் பார்க்கணும்? ஒரு வாரம் ஓடுச்சா அப்புறம்தான் போகணும்கற கலாச்சாரத்தை ஏன் கொண்டு வரணும்? பார்த்துத் தெரிஞ்சிக்கோங்க.
அடுத்தவன் சொல்லி பார்க்கணும்னு நினைச்சா அது முட்டாள்தனம்தானே. ஒரு படம் நல்லா ஓடுச்சுன்னா 1000 குடும்பங்கள் வாழும். வாழ வைக்கப்பாருங்க. தமிழரோட கலாச்சாரமே அதுதான். அதே நேரம் இயக்குனர் விமர்சனத்துல குறைகளை நாசூக்கா சுட்டிக் காட்டலாம் என்கிறார்.
படத்துல உள்ள வியாபாரத்தைப் பாதிக்கிற வகையில சொல்லக்கூடாது. அதுல இவ்ளோ குறைகள் இருக்கு. இப்படி பண்ணிருக்கலாம்னா பார்க்குறவங்களுக்கும் ரொம்ப பிடிக்கும். பட்டவர்த்தமா சொல்லக்கூடாது. என்கிறார் ரமேஷ்கண்ணா. இந்தப் படம் நாளை திரையரங்குகளில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.