பிசிசிஐ சென்ட்ரல் கான்ட்ராக்ட்டை இழந்தாலும் வென்று காட்டிய சாம்பியன் ஸ்ரேயாஸ்!
சென்னை: சரியாக ஓராண்டுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் வீரர்களுக்கான ஆண்டு ஒப்பந்தத்தை இழந்தார் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர். இப்போது சாம்பியன்ஸ் டிராபி பட்டம் வென்றுள்ள இந்திய அணியில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
கிரிக்கெட் உலகின் தலைசிறந்த ‘நம்பர் 4’ நடுவரிசை நாயக பேட்ஸ்மேன்களில் ஒருவர் என்பதை அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடர் மூலம் மீண்டும் நிரூபித்துள்ளார். நடந்து முடிந்த சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி தரப்பில் அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேனாக திகழ்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


