England: வருத்தமும் ஏமாற்றமும் இருக்கிறதுதான் ஆனாலும்..- கேப்டன் பதவியிலிருந்து விலகிய ஜாஸ் பட்லர்

இங்கிலாந்து அணியின் ஒயிட் பால் கேப்டன் ஜாஸ் பட்லர் அந்த பதவியிலிருந்து விலகியிருக்கிறார்.

Buttler

சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்து அணி மிக மோசமாக ஆடியிருக்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி, இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராகவும் தோல்வியை தழுவியது. இதன்மூலம், சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதிக்கும் அந்த அணி தகுதிபெற முடியவில்லை. மேலும், இதே பட்லரின் கேப்டன்சியில் 2023 ஓடிஐ உலகக்கோப்பையிலும் இங்கிலாந்து அணி மோசமாக தோற்றிருந்தது. 2024 டி20 உலகக்கோப்பையையும் அந்த அணியால் வெல்ல முடியவில்லை. இந்தத் தொடர் தோல்விகளால் பட்லரின் கேப்டன்சி மீது விமர்சனங்கள் கூடியது. இதனைத் தொடர்ந்துதான் பட்லர் கேப்டன் பதவியிலிருந்து விலகினார்.

இங்கிலாந்து அணி நாளை தென்னாப்பிரிக்க அணியை எதிர்கொள்கிறது. அந்தப் போட்டிக்கு பட்லர் கேப்டனாக இருப்பார். அதுதான் கேப்டனாக அவரின் கடைசிப் போட்டியாக இருக்கும். இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த பட்லர், நான் கேப்டன் பதவியிலிருந்து விலகுகிறேன். சாம்பியன்ஸ் டிராபி தோல்வி வருத்தம் மற்றும் ஏமாற்றம் அளிக்கக்கூடியதுதான். ஆனாலும் இதிலிருந்து கடந்து வர வேண்டும்.

இதுதான் சரியான நேரம். இங்கிருந்து வேறொருவர் அணியை முன்னெடுத்து செல்ல வேண்டும். என்றார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.