தனுஷின் ‘குபேரா’ பட தலைப்புக்கு எதிர்ப்பு

சேகர் கம்முலா இயக்கத்தில், தனுஷ், நாகார்ஜுனா, ராஷ்மிகா மந்தனா மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'குபேரா'. இதை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் எல்எல்பி மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து, இறுதிக் கட்டப் பணிகள் நடந்து வருகின்றன. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்புக்குத் சிக்கல் வந்துள்ளது.

கரிமகொண்டா நரேந்தர் என்ற தெலுங்குப் படத் தயாரிப்பாளர், அங்குள்ள தயாரிப்பாளர் சங்கத்தில் இதே தலைப்பை கடந்த 2023-ம் ஆண்டு நவம்பர் மாதம் பதிவு செய்துள்ளார். அவர் படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்நிலையில் அதே தலைப்பை சேகர் கம்முலா அவர் படத்துக்குப் பயன்படுத்தியுள்ளார். அவர் தலைப்பை மாற்ற வேண்டும் என்று கூறியுள்ள அவர், இல்லை என்றால் தனக்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சினையில் தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் தலையிட்டு சுமூகமாக முடிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.