இரவு மட்டும்தான் கொண்டாட்டம்; காலை எழுந்தவுடன் பயிற்சிதான்!- வெற்றிக்குப் பின் ஆப்கன் பயிற்சியாளர்

சாம்பியன்ஸ் டிராபியில் ஆப்கானிஸ்தானும் இங்கிலாந்தும் மோதிய போட்டி நேற்று நடந்திருந்தது. பரபரப்பாக நடந்த அந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்தப் போட்டிக்குப் பிறகு அந்த அணியின் பயிற்சியாளர் ஜோனாதன் டிராட் பத்திரிகையாளர்களைச் சந்தித்திருந்தார்.
Afghanistan

அவர் பேசுகையில், இன்று இரவு அவர்கள் இந்த வெற்றியை நன்றாக கொண்டாடட்டும். நாளை காலை எழுந்தவுடன் கொண்டாட்டங்களையெல்லாம் ஓரம் வைத்துவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்குத் தயாராகுங்கள் என்பேன். ஆஸ்திரேலியாவும் எங்களை அத்தனை எளிதாக எடுத்துக்கொள்ளாது என நினைக்கிறேன். நாங்களும் அவர்களை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். முன்பெல்லாம் ஆஸ்திரேலியாவை ஆப்கானிஸ்தான் மாதிரியான அணி எதிர்கொள்கிறதெனில் அதை எளிதான போட்டியாக நினைப்பார்கள். ஆனால், இப்போதைய சூழலில் நிலைமை அப்படியில்லை என நினைக்கிறேன்.

நான் பயிற்சியாளர் ஆனதிலிருந்து மூன்று முறை ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டிருக்கிறோம். அந்த எல்லா போட்டிகளிலும் கடும் சவாலளிக்கும் வகையில் ஆடியிருக்கிறோம். இனியும் ஆப்கானிஸ்தானை அவ்வளவு எளிதாக எடுத்துகொள்ள முடியாது. இந்த ஆப்கானிஸ்தான் அணியின் மீண்டெழும் சக்திதான் வியப்பளிக்கிறது. இவர்களிடம் தன்னம்பிக்கை இருக்கிறது. ஒருவரிடம் இருக்கும் நம்பிக்கை அப்படியே ஒட்டுமொத்த அணிக்கும் பரவுகிறது. வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியாவுடன் மோதுகிறோம். அந்தப் போட்டி சுவாரஸ்யமானதாக இருக்கும். மக்களும் பெரும் எண்ணிக்கையில் அந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்கி போட்டியைக் காண வருவார்கள் என நம்புகிறேன். என்றார்.

Trott

ஆப்கானிஸ்தான் அணியின் எழுச்சியைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.