மத சட்டங்கள் நிறைந்த நாட்டில் அது எங்கள் கைகளில் இல்லை - ஆப்கன் பெண்கள் மீதான தடை பற்றி ஹஷ்மதுல்லா
ஆப்கானிஸ்தானில் 2021-ல் தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு, அந்நாட்டு பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதில், விளையாட்டில் பெண்கள் பங்கேற்கக் கூடாது என்பதும் அடங்கும். இதனால், விளையாட்டை உயிர் மூச்சாகக் கருதிய பல வீராங்கனைகள் நாட்டை விட்டு வெளியேறினர்.
ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீராங்கனைகள் சிலர் ஆஸ்திரேலியாவில் இருக்கின்றனர். அவர்கள் அங்குள்ள ஸ்போர்ட்ஸ் கிளப்களில் விளையாடி வருகின்றனர். தற்போது அவர்கள் பல்வேறு நாடுகளில் தஞ்சமடைந்திருக்கின்றனர்.

இந்த நிலையில், பாகிஸ்தானில் நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபியில் இங்கிலாந்துக்கெதிரான போட்டிக்கு முன்பு செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஆப்கானிஸ்தான் ஆண்கள் அணி கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி, ``எல்லோரும் விளையாடுவதைப் பார்க்க எல்லோரும் விரும்புகிறார்கள். நாங்கள் கிரிக்கெட் வீரர்கள் மட்டுமே, அதனால் மைதானத்தில் உள்ள விஷயங்களை மட்டுமே எங்களால் கட்டுப்படுத்த முடியும். அரசியல் சார்ந்த விஷயங்களை எங்களால் கட்டுப்படுத்த முடியாது. கடுமையான மதச் சட்டங்களால் நிர்வகிக்கப்படும் ஒரு நாட்டில் பெண்களும் கிரிக்கெட் விளையாட வேண்டும் என்று முடிவெடுக்கும் அதிகாரம் எங்களுடைய கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டது.” என்று கூறி கூறினார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


