IPL: `கேப்டன் பதவியை நான் ஏற்க தயார்.. - கொல்கத்தா அணியின் கேப்டனாகும் முனைப்பில் வெங்கடேஷ் ஐயர்

கேப்டன் பதவி வழங்கினால் கொல்கத்தா அணியைத் தலைமை தாங்க தயார் என்று வெங்கடேஷ் ஐயர் தெரிவித்திருக்கிறார்.

2024 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி இரண்டாவது முறையாக கோப்பையை வென்றது. இம்முறையும் கோப்பையை வெல்லும் முனைப்பில் ஈடுபட்டு வருகிறது. வரும் மார்ச் 22 ஆம் தேதி  தொடங்கும் முதல் போட்டியில் பெங்களூரு அணியை கொல்கத்தா அணி எதிர்கொள்ள இருக்கிறது.

கொல்கத்தா அணி

கடந்த ஆண்டு கொல்கத்தா அணிக்கு கேப்டனாக செயல்பட்ட ஸ்ரேயாஸ் ஐயரை இந்த முறை அணி நிர்வாகம் ஏலத்தில் எடுக்கவில்லை. இதனால் கொல்கத்தா அணியின் கேப்டனாக சீனியர் வீரரான அஜிங்யா ரகானா அல்லது இளம் அதிரடி வீரர் வெங்கடேஷ் ஐயர் ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்பட வாய்ப்பு உள்ளது.

இந்நிலையில் சமீபத்திய நேர்காணல் ஒன்றில் கொல்கத்தா அணியில் இடம்பெற்றிருக்கும் வெங்கடேஷ் ஐயரிடம் கேப்டன்ஷிப் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த அவர், “கொல்கத்தா அணியின் கேப்டன் பதவி எனக்கு வழங்கப்பட்டால் அதை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்.

வெங்கடேஷ் ஐயர்

கேப்டன் என்பது வெறும் பட்டம் மட்டுமே. அதைவிட தலைமை பண்பில்தான் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. கேப்டனாக இருப்பதைவிட அணியில் ஒரு நல்ல தலைவனாக இருப்பதே பெரிய விஷயம். மற்ற வீரர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டும்” என்று கூறியிருக்கிறார். 

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs

வணக்கம்,

BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.