`ஏமாத்தினவன் ஊர்ல போய் புகார் கொடுன்னு சொல்றாங்க - `வாட்ஸ் அப்பில் பணத்தை இழந்த மிர்ச்சி செந்தில்
சைபர் மோசடிக்கு ஆளாகி ரூ.15,000 இழந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டிருக்கிற நடிகர் மிர்ச்சி செந்திலிடம் பேசினோம்.
எனக்கு ரொம்ப வருஷமா நட்புல இருக்கிற நண்பர் அவர். கோயம்புத்தூர்ல பிரபலமான உணவகங்களை நடத்திட்டு வருது அவருடைய குடும்பம். அப்பப்ப வாட்ஸ் அப்ல நாங்க பேசிக்குவோம். அன்னைக்கு நான் ஷூட்டிங்ல இருந்தேன். பிரேக்ல மொபைலை பார்த்தா திடீர்னு அவருடைய நம்பர்ல இருந்தே அந்த மெசேஜ். ரூ.15,000 உடனே வேணும்னு கேட்டு வந்திருந்த மெசேஜ். அதாவது நம்ம ஃபோன் புக்ல இல்லாத ஒரு நம்பர்ல இருந்து அந்த மாதிரி மெசேஜ் வந்திருந்தா நாம் செக் பண்ணலாம். நாம வழக்கமா பேசிட்டிருக்கிற நம்பர்ல இருந்து வந்ததால எனக்கு குழப்பம் எதுவும் வரல.
பெரிய இடத்து நண்பர்தான். ஆனாலும் பிரச்னை யாருக்குதான் இல்ல. அதனால உடனே பணத்தை அனுப்பிட்டேன். என்ன பிரச்னைன்னு ஒரு செகண்ட் கேட்டுட்டுப் பேசியிருக்கலாம்தான். ஆனா அது நாகரிகமா இருக்காதுன்னு நினைச்சேன். ஏதோ கஷ்டம்னு கேக்கறார். நாம பணத்தை அனுப்பிட்டுப் பிறகு கேட்கலாம்னு பட்னு அனுப்பிட்டேன்.
பணம் அனுப்பறதுக்கு வேற மொபைல் நம்பர்தான் வந்தது. அதைக்கூட முன்கூட்டியே என்னால் சந்தேகப்படத் தோணல இன்னைக்கு பொதுவா எல்லாருமே பேசறதுக்கு ஒரு நம்பர் வாட்ஸ் அப்க்கு ஒரு நம்பர்னு வச்சிருக்காங்களே.
பணத்தை அனுப்பிய அடுத்த செகண்ட் அதுல காட்டிய அந்த அக்கவுன்ட் வச்சிருக்கிறவர் பெயரைப் பார்த்ததும்தான் ஜெர்க் ஆச்சு. அது ஒரு வட இந்தியப் பெயர். உடனே அவருக்குப் போன் போட்டா , நீங்களுமா, இதுவரை 100 பேர் போன் பண்ணிட்டாங்கன்னு சொல்றார்.
என்ன சொல்றது? என்னை யாராலும் ஏமாத்த முடியாதுன்னு மட்டும் யாரும் நினைக்காதீங்க. தயவு செஞ்சு எச்சரிக்கையா இருங்க.

வீடியோ போட்டு நாம ஏமாந்ததை நாலு பேருக்குச் சொல்லி அவமானப்படணுமானு கூடத் தோணுச்சு. ஆனா அந்த நண்பர்தான் நீங்க பேசினா நாலு பேருக்கு பயன்படுமில்லையான்னு பேசச் சொன்னார்.
இப்படியொரு சம்பவம் நடந்ததுமே, தன்னுடைய வாட்ஸ் அப் ஹேக் செய்யப்பட்டு மோசடி நடக்கறதா அவர் சைபர் கிரைம்க்குப் போய் புகார் தந்திருக்கார். ரெண்டு மணி நேரத்துக்கும் மேல அவருடைய போனை வாங்கி எல்லாத்தையும் பார்த்தவங்க, கடைசியில உங்களை ஏமாத்தியவன் எங்கேயோ இருந்து ஆபரேட் பண்ணியிருக்கான், அந்த ஊர்ல போய்தான் புகார் கொடுக்கணும்னு சொன்னாங்களாம். தலையிலடிச்சு நொந்துகிட்டார் அவர். அதாவது ஏமாத்தினவன் எங்க இருக்கான்னே தெரியல. அவன் ஊரைக் கண்டுபிடிச்சு போய் புகார் தரணுமாம். எவ்வளவு பெரிய கொடுமையான பதில் இது.
அதேபோல அந்த மோசடி ஆசாமி என்னை மாதிரியே இன்னும் சிலர்கிட்டயும் பணம் பறிச்சிட்டான். பலருக்கு ரெண்டாவதும் மெசேஜ் பண்ணியிருக்கான். எனக்குமே மறுபடியும் பணம் கேட்டு மெசேஜ் பண்ணினான்.
என்னுடைய பேங்க்ல நான் புகார் தந்தப்பவும் , சைபர் கிரைம் போய் நடவடிக்கை எடுக்க முடியுதா பார்ப்போம்னு சொல்லியிருக்காங்க. மொத்தத்துல இந்த மாதிரி மோசடிகள் இப்ப சர்வ சாதாரணமா நடந்திட்டுக்கறதால, நாமதான் எச்சரிக்கையா இருக்கணும்கிற பாடம் எனக்குக் கிடைச்சிருக்கு என்கிறார்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.
Click here: https://bit.ly/VikatanWAChannel
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

