INDvsPAK: எந்த ஏமாற்றமும் இல்லை; பாகிஸ்தானுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை - அக்தர் காட்டம்

ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2025 கிரிக்கெட் தொடரில் நேற்று(பிப்ரவரி 23) நடைபெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி வீழ்த்தியிருந்தது.

குறிப்பாக நேற்றைய போட்டியில் நங்கூரமாக விளையாடிய நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலி ஃபார்முக்கு வந்து சதத்தை அடித்து, 100 ரன்களைக் குவித்தார். அதனால் அடுத்தடுத்த வெற்றிகளைப் பெற்ற இந்தியா இத்தொடரின் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட உறுதி செய்திருக்கிறது. மறுபுறம் பாகிஸ்தான் செமி ஃபைனலுக்கு செல்லும் வாய்ப்பைக் கிட்டத்தட்ட இழந்திருக்கிறது. இந்நிலையில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயப் அக்தர் அந்த அணியை விமர்சித்து பேசியிருக்கிறார்.

இதுதொடர்பாக பேசிய அவர், " இந்தியாவுக்கு எதிரான போட்டியில் என்ன நடக்கும் என்று எனக்கு ஏற்கனவே தெரியும் என்பதால் எந்தவித ஏமாற்றமும் எனக்கு இல்லை. உலகெங்கும் ஆறு பந்துவீச்சாளர்களை வைத்துக்கொண்டு விளையாடுகிறார்கள். உங்களால் சரியாக 5 பந்துவீச்சாளர்களை கூட தேர்வு செய்ய முடியாதா? இரண்டு ஆல்ரவுண்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு செல்கிறீர்கள்.

பாகிஸ்தான் நிர்வாகம் மூளையற்று செயல்படுகிறது. பாகிஸ்தான் வீரர்களை குறை சொல்ல முடியாது. ஏனென்றால் அணி நிர்வாகம் போலவே அவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு முதலில் என்ன செய்வது என்றே தெரியவில்லை. விராட், ரோஹித் மற்றும் கில் போன்ற இந்திய வீரர்களிடம் இருக்கும் திறமை இவர்களிடம் இல்லை.

வீரர்களுக்கும் அணி நிர்வாகத்திற்கும் தெளிவான பார்வை எதுவும் கிடையாது. அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து அவர்கள் யாருக்குமே தெரியாது” என்று விமர்சித்திருக்கிறார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.