PAK v IND: துபாய் மைதானத்துக்கு திடீர் விசிட்; ஐ.சி.சி விருதுகளுடன் கெத்து காட்டிய பும்ரா

சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி துபாய் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டியை காண வருகை தந்திருக்கும் பும்ராவுக்கு ஐ.சி.சி விருதுகளை வழங்கி கௌரவித்திருக்கிறது.
Bumrah

பார்டர் கவாஸ்கர் டிராபிக்குப் பிறகு பும்ரா முதுகு வலியால் அவதிப்பட்டு வந்தார். அதனால் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஓடிஐ தொடரையும் இப்போது நடந்து வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரையும் பும்ரா தவறவிட்டார். முதுகுவலியிலிருந்து குணமாக சிகிச்சைகளை எடுத்து வருகிறார். இந்நிலையில், இன்று இந்திய அணியும் பாகிஸ்தான் அணியும் மோதும் போட்டியைக் காண பும்ராவும் துபாய் மைதானத்திற்கு வருகை தந்திருந்தார். போட்டிக்கு முன்பாக இந்திய அணி வீரர்களையும் சந்தித்து ஜாலியாக உரையாடிக் கொண்டிருந்தார். போட்டி ஆரம்பிப்பதற்கு முன்பு அவருக்கு ஐ.சி.சி சார்பில் விருதுகள் வழங்கப்பட்டன.

ICC Mens Cricketer of the Year, ICC Test Cricketer of the Year, ICC Test Team of the Year, ICC T20 Team of the Year என 2024 ஆம் ஆண்டுக்கான விருதுகளை பும்ராவுக்காக ஐ.சி.சி அறிவித்திருந்தது. அந்த விருதுக்கான கோப்பைகளையும் தொப்பியையும் ஐ.சி.சியின் சேர்மன் ஜெய் ஷா வழங்க பும்ரா பெற்றுக்கொண்டார்.

Bumrah

பும்ரா அணியில் இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என விரும்பிய ரசிகர்கள், பும்ராவை மைதானத்தில் கண்டவுடன் உற்சாகமடைந்தனர்.

வணக்கம் வாசகர்களே விகடனின் லேட்டஸ்ட் செய்தி அப்டேட்கள், எக்ஸ்க்ளூசிவ் வீடியோக்கள், சுட சுட சுவாரஸ்யமான கட்டுரைகள் என உங்களை எப்போதும் ட்ரெண்டியாக வைத்திருக்க விகடன் வாட்ஸ்அப் சேனலில் இணைந்திருங்கள்.

Click here:  https://bit.ly/VikatanWAChannel

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.