சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா.,

சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா.,

பாகிஸ்தான் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தில் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ‘பி’ பிரிவு லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்கா , ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. ‘டாஸ்’ வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங் தேர்வு செய்தது.இதையடுத்து, முதலில் பேட்டிங் செய்த தென் ஆப்பிரிக்கா அணியில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரியான் ரிக்கல்டன்  மற்றும் டோனி டி சோர்ஸி களமிறங்கினர்.
இதில் நிலைத்து நின்று ஆடிய ரியான் ரிக்கல்டன் (103), சதம் விளாசி அசத்தினார். அதே போல், அதிரடியாக விளையாடி அரைசதம் விளாசிய ஐடன் மார்க்ராம் 52 ரன்களும், அரை சதம் கடந்த டெம்பா பவுமா 58 ரன்களும் எடுத்தனர். இறுதியாக தென் ஆப்பிரிக்கா அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 315 ரன்கள் ரன்கள் குவித்தது. ஆப்கானிஸ்தான் அணியில் அதிகபட்சமாக முகமது நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 316 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆப்கானிஸ்தான் அணி விளையாடி வருகிறது.

f o llo w our Instagram for the latest updates

The post சாம்பியன்ஸ் டிராபி 2025: ஆப்கானிஸ்தானுக்கு 316 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தென் ஆப்பிரிக்கா., appeared first on EnewZ - Tamil.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.