Dhoni: ``அதே அப்பாவித்தனத்துடன் விளையாட விரும்புகிறேன் - கிரிக்கெட் குறித்து பகிர்ந்த தோனி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் வரும் மார்ச் 22ஆம் தேதி தொடங்கி மே 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இந்த தொடரில் சிஎஸ்கே அணி ஆறாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து இருக்கிறது. தோனி விளையாடும் கடைசி தொடர் இதுவாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சஞ்சு சாம்சன் மற்றும் எம்.எஸ்.தோனி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருக்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் தோனி சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

தோனி - சஞ்சு சாம்சன்

"நான் 2019-ல் இருந்து ஓய்வு பெற்றுவிட்டேன். ஆனால் என்னால் முடிந்தவரை கிரிக்கெட்டை விளையாடி வருகிறேன். ஒரு கிரிக்கெட் வீரர் நாட்டிற்காக விளையாடுவதற்கு பெருமைப்பட வேண்டும். நாங்கள் ஒவ்வொரு நாட்டிற்கும் விளையாட செல்லும்போது இந்தியாவிற்காக விளையாடுகிறோம் என்ற பெருமை இருக்கும்.

நாம் விளையாடும் கிரிக்கெட் நமக்கு முழு திருப்தியை அளிக்கிறதா என்பதை உணர வேண்டும், வேறு எதுவும் முக்கியமில்லை” என்றிருக்கிறார். தொடர்ந்து பேசிய அவர், “எனது பள்ளி காலங்களில் நான் கிரிக்கெட்டை எப்படி ரசித்து விளையாடினேனோ அதேபோல இப்போதும் ரசித்து விளையாட விரும்புகிறேன்.

தோனி

நான் காலனியில் வசித்தபோது, மாலை 4 மணிதான் எங்களது விளையாட்டு நேரம், அப்போது கிரிக்கெட் விளையாடுவோம். வானிலை அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் கால்பந்து விளையாடுவோம். நான் அதே வகையான அப்பாவித்தனத்துடன் விளையாட விரும்புகிறேன்” என்று பகிர்ந்திருக்கிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.