பில்டப் தராம கொஞ்சம் அமைதியா இருங்கய்யா!.. படம் வரட்டும்.. கலாய்த்த ப்ளூ சட்டை..!

Actor Ajith: தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர் நடிகர் அஜித் தற்போது கார் பந்தயத்தில் முழு வீச்சில் பங்கு பெற்ற வருகின்றார். துபாயில் நடைபெற்ற கார் ரேஸில் பங்கு பெற்று மூன்றாவது பரிசு பெற்ற அஜித் தற்போது போர்ச்சுக்களில் நடைபெற்று வரும் கார் பந்தயத்தில் கலந்து கொண்டு வருகின்றார்.

இந்த வருடத்தின் 9 மாதம் கார் ரேஸில் தான் பங்கு பெற இருப்பதாக அவர் அறிவித்திருக்கின்றார். இதனால் கடந்த வருடத்தின் இறுதியிலேயே தான் கமிட் செய்திருந்த இரண்டு படத்தின் படப்பிடிப்பையும் முடித்து கொடுத்து விட்டு சென்று விட்டார்.

விடாமுயற்சி: அஜித் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படம் விடாமுயற்சி. துணிவு திரைப்படத்தை முடித்த கையோடு நடிகர் அஜித் கமிட்டான இந்தத் திரைப்படத்தை இரண்டு வருடங்களாக எடுத்து வந்தார்கள். ஒரு வழியாக படம் கடந்த பிப்ரவரி 6ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.


படம் வெளியான நாளில் அஜித் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வந்த நிலையில் அடுத்தடுத்த நாட்கள் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்கள் வந்து கொண்டிருந்தது. இதனால் வசூல் ரீதியாக விடாமுயற்சி திரைப்படத்திற்கு தொய்வு ஏற்பட்டு இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படத்தில் வழக்கமான அஜித்தை தங்களால் பார்க்க முடியவில்லை என்பது ரசிகர்களின் ஆதங்கமாக இருந்து வருகின்றது.

குட் பேட் அக்லி திரைப்படம்: விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த போதே நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்திரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படம் வருகிற ஏப்ரல் பத்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது.

இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்கள் ஏகப்பட்ட நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். காரணம் இந்த படத்திலிருந்து வெளியான புகைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. அஜித்தின் லுக் மற்றும் ஸ்டைல் போன்றவை வித்தியாசமாக இருந்த காரணத்தால் படம் நிச்சயம் ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கலாய்த்த ப்ளூ சட்டை: சமூக வலைதள பக்கங்களில் கடந்த சில நாட்களாக குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து ஆஹா ஓஹோ என்று சிலர் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அதிலும் இப்படத்தில் ஸ்டன்ட் மாஸ்டராக பணியாற்றிய சுப்ரீம் சுந்தர் குட் பேட் அக்லி திரைப்படத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் சாதாரணமாக திரையரங்குக்கு போக முடியாது.


விக்ஸ் அல்லது ஹால்ஸ் போன்றவற்றை எடுத்துக் கொண்டுதான் போக வேண்டும். காரணம் படம் முழுக்க கத்தி கத்தி ரசிகர்களுக்கு தொண்டை வலியை வந்துவிடும் என்கின்ற அளவிற்கு பேசியிருந்தார். அதனை தொடர்ந்து ரோகிணி திரையரங்கு உரிமையாளர் ரேவந்த் ரஜினிகாந்த் அவர்களுக்கு பேட்ட திரைப்படம் எப்படி இருந்ததோ, அதே அளவுக்கு அஜித்துக்கு இப்படம் இருக்கும் என்று கூறியிருந்தார்.

இப்படி தொடர்ந்து பலரும் படத்திற்கு பில்டப் மேல் பில்டப் கொடுத்து வரும் நிலையில் ப்ளூ சட்டை மாறன் பில்டப் தரமா அமைதியா இருங்கயா.. படம் முதல்ல வரட்டும்.. என்று கூறி கலாய்த்திருக்கின்றார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.