மணிகண்டன் - கெத்து தினேஷை நம்பி களமிறங்கும் பிரபல இயக்குனர்… மாஸா இருக்குமோ?

Manikandan: தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் தற்போதைய சென்சேஷன் நாயகர்களை தன்னுடைய படத்தில் ஒப்பந்தம் செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

சின்ன பட்ஜெட் படங்கள் பெரிதாக வெல்லாது என்ற எண்ணம் மாறி தற்போது கதைக்காக படங்கள் சூப்பர்ஹிட் அடித்து வருகிறது. அதிலும் கதைக்காக படத்தினை தேர்வு செய்து எடுத்து நடிக்கும் மணிகண்டன் படங்களும் வெற்றி படமாக அமைவது வழக்கமாகி இருக்கிறது.

லவ்வர், குட் நைட் தொடங்கி குடும்பஸ்தன் படங்கள் மிகப்பெரிய வெற்றி படங்களாக அதன் கதைக்காக ஹிட்டடித்துள்ளது. இதுபோல அட்டக்கத்தி தினேஷ் நடிப்பில் சமீபத்தில் உருவான திரைப்படம் லப்பர் பந்து. முதலில் ஹரிஷ் கல்யாண் படமாக வெளியானது.

ஆனால் இப்படத்தில் கெத்து கேரக்டரில் நடித்த தினேஷ் கேரியரே மிகப்பெரிய அளவில் உயர்ந்தது. அவரை ரசிகர்கள் கெத்து தினேஷ் என்றும் அழைத்து வருகின்றனர். தற்போது இந்த சென்சேஷன் நாயகர்களான கெத்து தினேஷ் மற்றும் மணிகண்டன் தற்போது ஒரே படத்தில் இணைய இருக்கிறார்.

பா.ரஞ்சித் இயக்கத்தில் வேட்டுவம் என்ற படத்தினை இயக்க இருக்கிறார். இப்படத்தில் வில்லனாக நடிகர் ஆர்யா நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. வேட்டுவம் படத்தின் ஷூட்டிங் மார்ச் மாதத்தில் தொடங்கப்பட இருக்கிறதாம். இதனால் சார்பட்டா இரண்டாம் பாகம் தள்ளிப் போகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுமட்டுமல்லாமல் இப்படத்தில் அசோக் செல்வனும் நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. கோலிவுட்டின் முன்னணி ஹிட் நடிகர்களை ஒன்றிணைப்பதால் வேட்டுவம் தற்போது ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கிறது.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.