Virat Kohli: 6 ரன்னில் க்ளீன் போல்ட்; மீண்டும் ஏமாற்றிய கோலி; ரஞ்சியில் தடுமாறும் சீனியர்ஸ்

இந்திய கிரிக்கெட் அணி கடைசியாக சொந்த மண்ணில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (NZ 3 - 0), வெளிநாட்டில் விளையாடிய டெஸ்ட் தொடரிலும் (AUS 3 -1) படுமோசமான தோல்வியைச் சந்தித்தது.

இந்திய அணியின் இத்தகைய தோல்விக்கு முக்கியமான காரணம் பேட்டிங் யூனிட் என்றால், அதில் குறிப்பிடத்தக்கவர்கள் சீனியர் வீரர்களான கேப்டன் ரோஹித் சர்மாவும், விராட் கோலியும்தான்.

ரோஹித், கோலி

மறுபக்கம், தோல்வியின் எதிரொலியாக எழுந்த கடும் விமர்சனங்களால், இந்திய அணியில் விளையாடுபவர்கள் சர்வதேசத் தொடர்கள் இல்லாத சமயங்களில் உள்ளூர் கிரிக்கெட்டில் கண்டிப்பாக விளையாட வேண்டும் என BCCI தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் காரணமாக, ரோஹித், கோலி, ரிஷப் பண்ட், ஜடேஜா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில் ஆகியோர் நடப்பு ரஞ்சி டிராபி தொடரில் களமிறங்கினர். இதில், 9 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் களமிறங்கிய ரோஹித் உட்பட ரிஷப் பண்ட், ஜெய்ஸ்வால் ஆகியோர் அரைசதம்கூட அடிக்கவில்லை.

மறுபக்கம், ஜடேஜா 12 விக்கெட்டுகள் வீழ்த்தினார். அதேபோல், சுப்மன் கில் ஒரு சதமும் அடித்தார். இத்தகைய சூழலில்தான், நேற்று தொடங்கிய டெல்லி vs ரயில்வேஸ் போட்டியின் மூலம் 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் களமிறங்கினார். கோலியின் வருகையால், டெல்லியில் அருண் ஜெட்லி மைதானம் முழுவதும் ரசிகர்களால் நிரம்பி வழிந்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், ரயில்வேஸ் அணி நேற்றைய 241 ஆல் அவுட் ஆனதைத்தொடர்ந்து பேட்டிங் செய்த டெல்லி ஒரு விக்கெட் இழப்பு 41 ரன்கள் குவித்தது.

That Virat Kohlis entry, just pure Cinema ❤️ #ViratKohli pic.twitter.com/s7xVLvAiH5

— Lokesh Saini (@LokeshVirat18K) January 31, 2025

இதனால், இன்றைய இரண்டாம் நாள் ஆட்டத்தில் கோலி நிச்சயம் களமிறங்குவார் என்ற எதிர்பார்ப்பில் இன்றும் ரசிகர்கள் கூட்டம் அலைமோதியது. அதற்கேற்றாற்போல, டெல்லிக்கு 78-வது ரன்னில் இரண்டாவது விக்கெட் விழ, ரசிகர்களின் பெரும் ஆர்ப்பரிப்புக்கு மத்தியில் கோலி களத்தில் இறங்கினார். ஆனால், அடுத்த சில நிமிடங்களிலேயே அந்த ஆர்ப்பரிப்பு மொத்தமாக அடங்கி மைதானம் முழுவதும் நிசப்தமானது.

This is so embarrassing for Virat Kohli. champu PR can talk about the lines outside stadiums and how he eats Chilli Paneer. But they won’t solve his technical issues pic.twitter.com/hAE32IHsBs

— Aadit Kapadia (@ask0704) January 31, 2025

ஆட்டத்தின் 27-வது ஓவரை வீசிய ரயில்வேஸ் வீரர் ஹிமான்ஷு சங்வான் வீசிய பந்தில் கிளீன் போல்டானர். 12 ஆண்டுகளுக்குப் பிறகு ரஞ்சி டிராபியில் களமிறங்கிய கோலி வெறும் 6 ரன்களில் அவுட்டாகி பெரும் ஏமாற்றத்தை அளித்ததால், அவர் அவுட்டான அடுத்த நொடியே ரசிகர்களும் கூட்டம் கூட்டமாக மைதானத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸிலாவது கோலி தனது ரசிகர்களுக்கு பேட்டிங்கில் விருந்தளிப்பாரா என்று பார்க்கலாம்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.