இங்கிலாந்துடன் 4-வது டி20-ல் இன்று மோதல்: மீண்டெழுமா இந்திய அணி?
புனே: இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையே 5 ஆட்டங்கள் கொண்ட இருதரப்பு டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. முதல் இரு ஆட்டங்களிலும் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ராஜ்கோட்டில் நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் இங்கிலாந்து அணி 26 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது. இதனால் அந்த அணி தொடரை உயிர்ப்பிப்புடன் வைத்துள்ளது. தொடரில் இந்திய அணி 2-1 என முன்னிலை வகிக்க்கும் 4-வது ஆட்டம் இன்று இரவு புனேவில் நடைபெறுகிறது.
இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றால் இந்திய அணி டி20 தொடரை 3-1 தன்வசப்படுத்தும். ராஜ்கோட்டில் இந்திய அணி பேட்டிங்கில் உயர்மட்ட செயல் திறனை வெளிப்படுத்தத் தவறியது. தொடக்க வீரரான சஞ்சு சாம்சனிடம் இருந்து இதுவரை பெரிய அளவிலான மட்டை வீச்சு வெளிப்படவில்லை. 3 ஆட்டங்களிலும் அவர், முறையே 26, 5, 3 ரன்களில் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன், ஷாட்பாலில் விக்கெட்டை பறிகொடுப்பது தொடர் கதையாக உள்ளது. மேலும் 145 கிலோ மீட்டர் வேகத்துக்கு மேல் வீசப்படும் பந்துகளில் தடுமாறுகிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


