Chess: தமிழக வீராங்கனைக்கு கை குலுக்க மறுத்தது ஏன்..? -செஸ் வீரர் மன்னிப்புக் கேட்டு விளக்கம்!
நெதர்லாந்தில் டாடா ஸ்டீல் செஸ் போட்டி நடந்து வருகிறது. இந்தப் போட்டியில் இந்திய செஸ் வீராங்கனை கிராண்ட்மாஸ்டர் வைஷாலிக்கும் உஸ்பெகிஸ்தான் செஸ் வீரர் கிராண்ட்மாஸ்டர் நோடிர்பெக் யாகூப்புகும் போட்டி நடந்தது. போட்டி தொடங்குவதற்கு முன்பு வைஷாலி நோடிர்பெக் யாகூப்புக்கு கைகுலுக்கும் விதமாக கை கொடுத்தார். ஆனால், நோடிர்பெக் யாகூப் கைக் கொடுக்கவில்லை. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது.
இந்த நிலையில், உஸ்பெகிஸ்தான் செஸ் வீரர் நோடிர்பெக் யாகூப் தன் சமூகவலைதளப் பதிவில், ``அன்புள்ள செஸ் வீரர்களே... நெதர்லாந்து செஸ் போட்டியில் நடந்த ஒரு நிகழ்வு குறித்து விளக்க விரும்புகிறேன். நான் நம்பும் மத நம்பிக்கையின்படி மற்றப் பெண்களை தொடக்கூடாது என்பதால் வைஷாலியுடன் கை குலுக்கவில்லை. அதுதவிர வேறு எந்தக் காரணமும் இல்லை. நான் இந்திய செஸ் வீரர்களை மதிக்கிறேன். இந்தியாவின் வலிமையான செஸ் வீரர்களாக வைஷாலியையும், பிரக்யானந்தாவையும் மதிக்கிறேன். என் நடத்தை அவர்களைப் புண்படுத்தியிருந்தால் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன்.
என் தனிப்பட்ட நம்பிக்கையின்படியே நான் செயல்படுகிறேன். எல்லோரும் இதைப் பின்பற்ற வேண்டும் என்றோ, பெண்கள் ஹிஜாப் அணிய வேண்டும் என்றோ நான் எப்போதும் வலியுறுத்தியதில்லை. அவை எல்லாம் அவரவர் விருப்பம்." எனக் குறிப்பிட்டிருக்கிறார். நெதர்லாந்தில் நடந்தப் போட்டியில் வைஷாலி 4 -வது சுற்றில் நோடிர்பெக் யாகூபை தோற்கடித்தார். 14 வீரர்கள் இடம்பெறும் சேலஞ்சர்ஸ் பிரிவில் வைஷாலி தற்போது ஆறாவது இடத்தில் உள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும் https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


