‘பிரேமலு’ போல ‘2கே லவ் ஸ்டோரி’ வெற்றி பெறும்: இயக்குநர் சுசீந்திரன் நம்பிக்கை

திருமண போட்டோ எடுக்கும் இளைஞர்களின் வாழ்வில் நடக்கும் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள படம், ‘2கே லவ்ஸ்டோரி’. ஜெகவீர் நாயகனாக அறிமுகமாகிறார். மீனாட்சி கோவிந்தராஜன் நாயகியாக நடிக்கிறார். பால சரவணன், ஆண்டனி பாக்யராஜ், ஜெயப்பிரகாஷ், வினோதினி மற்றும் பலர் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். சிட்டி லைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பிப்.14-ம் தேதி வெளியாகிறது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

படத்தை இயக்கியுள்ள சுசீந்திரன் கூறும்போது, “2கே லவ் ஸ்டோரி எனக்கு முக்கியமான படம். ஒரு திரைப்படத்தை மக்களிடம் எடுத்துச் செல்வது முக்கியம். அதை தன் படமாக எடுத்துச் செல்லும் தயாரிப்பாளர் தனஞ்செயன் சாருக்கு நன்றி. ‘பிரேமலு’ வெளியான அன்று அது யாருக்கும் தெரியாது. வெளியாகி அடுத்த ஷோவில் உலகத்துக்கே தெரிந்தது. அது போல இந்தப்படமும் பெரிய வெற்றி பெறும். ‘பிரேமலு’ மாதிரி பெரிய கலெக்‌ஷன் கொடுக்கும் படமாக இருக்கும்” என்றார். இயக்குநர் எழில், நடிகர்கள் அருள்தாஸ், பாலசரவணன், திவ்யா துரைசாமி, மீனாட்சி கோவிந்தராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.