லேட்டா வந்தாலும் சும்மா கெத்தா வருவோம்ல... தளபதி 69 பட ரிலீஸில் மாற்றம்..
தளபதி 69: தற்போது விஜய் ஹெச். வினோத் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். கோட் திரைப்படத்திற்கு பிறகு நடிக்கும் இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அதற்கு காரணம் இந்த படத்தோடு விஜய் முழுவதுமாக அரசியலில் இறங்கப் போகிறார். இதோடு சினிமாவிற்கும் முற்றுப்புள்ளி வைக்க இருக்கிறார். அதனால் இந்த படம் ஒரு வெயிட்டான படமாக விஜயின் கேரியரில் இருக்க வேண்டும் என ஒட்டுமொத்த பட குழுவும் தீவிரமாக இறங்கி இருக்கின்றனர்.
எம்ஜிஆருக்கு இந்த பிரச்சினை: இதே மாதிரியான ஒரு நிலைமை தான் எம்ஜிஆருக்கும் இருந்தது. உலகம் சுற்றும் வாலிபன் படத்திற்கு பிறகு தான் அவர் அரசியலில் தீவிரமாக இறங்கினார். அதனால் அந்த படத்திற்கு பல தரப்பிலிருந்து பிரச்சனைகள் இருந்தது. ஆனால் அந்த பிரச்சனைகளை எல்லாம் சமாளித்து அந்தப் படத்திலும் வெற்றி கண்டார். அதேபோல் அரசியலிலும் வெற்றி கண்டார் எம்.ஜி.ஆர் .
முதலும் கடைசியும்: அதே போல் ஒரு சூழ்நிலைதான் விஜயின் இந்த படத்திற்கும் இருக்கும் என சொல்லப்படுகிறது. அது மட்டும் அல்ல இந்த படம் ஏதாவது ஒரு வகையில் ஒரு தரமான அரசியலை பேசும் படமாகவும் இருக்கும் என சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்த படத்திற்கு நாளைய தீர்ப்பு என்ற தலைப்பை வைக்கலாம் என்ற ஒரு பேச்சு அடிபட்டுக் கொண்டிருக்கின்றது. விஜய் முதன் முதலில் நடித்த படமும் நாளைய தீர்ப்பு படம் தான்.
ரிலீஸில் மாற்றம்: அதைப்போல் அவர் கடைசியாக நடிக்கும் இந்த படத்திற்கும் நாளைய தீர்ப்பு தலைப்பை வைக்கலாம் என்றும் ஆலோசித்து வருகிறார்கள். இந்த தலைப்பு மட்டும் ஓகே ஆகிவிட்டால் படத்தின் தலைப்புக்கும் அவர் அடுத்த அரசியலில் இறங்குவதற்கும் ஒரு சரியான பாதையாக இருக்கும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தில் பூஜா ஹெக்டே மமீதா பைஜு பாபி தியோல் போன்ற பல நடிகர்கள் நடித்து வருகின்றனர்.
இந்த படம் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் ரிலீஸ் ஆகும் என சொல்லப்பட்டது. ஆனால் தற்போது வந்த தகவலின் படி அதனுடைய ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது அடுத்த வருடம் பொங்கல் ரிலீஸ் ஆக இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது. இன்னும் இதைப் பற்றி எந்த ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. ஒரு வேளை அடுத்த வருடம் ரிலீஸ் என்றால் 2026 சட்டமன்ற தேர்தலும் இவருடைய இந்த கடைசி படமும் ஏதாவது ஒரு வகையில் மக்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துபவையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


