கூப்பிட்டதும் லுங்கியோடு ஓடி வந்த விஜயகாந்த்.. இந்த புகைப்படத்துக்கு இப்படி ஒரு பிளாஷ்பேக்கா?
தமிழ் சினிமாவில் ஒரு மாபெரும் ஆளுமையாக இருந்தவர் நடிகர் விஜயகாந்த். ரஜினி கமல் என தமிழ் சினிமாவை தங்களுக்குள் அடக்கி வைத்திருந்த இவர்களுக்கு மத்தியில் திடீரென முளைத்து ஒரு பெரிய ஆலமரமாக வளர்ந்து நின்றார் விஜயகாந்த். எப்படி அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் சிவாஜி ஜெமினி கணேசன் என மூவேந்தர்களாக சினிமாவை தங்கள் கைக்குள் அடக்கி வைத்திருந்தார்களோ அதைப்போல ரஜினி கமல் விஜயகாந்த் என இவர்களும் சினிமாவை ஆளாளுக்கு ஒரு பக்கம் ஆட்சி செய்து கொண்டு இருந்தனர்.
ஸ்டைலுக்கு ரஜினி நடிப்புக்கு கமல் மக்களுக்கு விஜயகாந்த் என அவரவர் நிலைப்பாட்டில் ஒரு மாஸ் ஹீரோக்களாக வலம் வந்தனர். ஒரு காலத்தில் ரஜினி வருகிறார் என்று சொன்னதும் அவருக்கு பாதுகாவலராக இருந்தவரே விஜயகாந்த் தான். பின்னாளில் அவருக்கே டப் கொடுக்கும் நடிகராக மாறினார் என்றால் எந்த அளவுக்கு சினிமா மீது அவருக்கு உண்டான மோகம் இதில் வெளிப்படுகிறது என்பதை நாம் பார்க்க வேண்டும்.
புரட்சி கலைஞராக உருவெடுத்து பின்னாளில் ஒரு கட்சியின் தலைவராகவும் மாறினார் விஜயகாந்த். அரசியலுக்கு வருவதற்கு முன்னரே ஈழத் தமிழர்களின் போராட்டம் காவிரி போராட்டம் என அனைத்திலும் கலந்து கொண்டு மக்களுக்காக தன் ஆதரவை கொடுத்தவர் விஜயகாந்த். எப்படியாவது மக்களின் குறையை போக்க வேண்டும் அவர்களின் கஷ்டங்களை தீர்க்க வேண்டும் என எவ்வளவோ முயற்சி செய்தும் அரசியலில் அவர் நினைத்த இடத்தை அடைய முடியவில்லை.
ஆனால் அரசியலுக்குள் வந்த குறுகிய காலத்தில் எதிர்க்கட்சி தலைவராக உயர்ந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். யாருக்கும் இல்லை என்று சொல்ல அவர் மனம் எண்ணியதே கிடையாது. தன்னை தேடி வருபவர்களை வயிறார சாப்பிட வைத்து அனுப்புவது தான் அவருடைய மரபாக இருந்தது .இந்த நிலையில் அவருடைய ஒரு பழைய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரல் ஆகிக்கொண்டே வரும். அதாவது விஜயகாந்த் ரஜினி கமல் சத்யராஜ் ஆகிய நான்கு பேரும் நாற்காலியில் அமர்ந்தவாறு ஒரு புகைப்படம் எப்போது பார்த்தாலும் கிடைக்கும்.

அந்த புகைப்படத்திற்கு பின்னணியில் உள்ள காரணம் பற்றி சத்யராஜ் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அந்த நேரத்தில் ஏதோ ஒரு போராட்டம் சினிமா துறையில் நடந்து கொண்டிருந்ததாம். உடனே பாலச்சந்தர் இவர்கள் நால்வரையும் அழைத்து ஏம்பா சினிமாவில் நீங்க நால்வரும் தான் ஒரு பெரிய நடிகர்களாக இருக்கிறீர்கள். அதனால் நீங்க நால்வரும் சேர்ந்து பேசி ஏதாவது ஒரு முடிவை எடுக்கலாமே எனக் கூறி தன்னுடைய வீட்டிற்கு அழைத்தாராம் பாலச்சந்தர்.
அந்த நேரத்தில் செல்போன் இல்லாத காலம் .பாலச்சந்தர் அழைக்கிறார் என்று எப்படியோ தெரிந்து கொண்ட விஜயகாந்த் அடித்து புரண்டு லுங்கியிலேயே அங்கு வந்து அமர்ந்திருந்தாராம் விஜயகாந்த். ஏனெனில் ஷூட்டிங் ஸ்பாட்டில் புரொடக்ஷனில் இருந்து எப்படியும் டிரஸ் கொடுப்பார்கள். அதனால் வீட்டில் இருந்தே லுங்கியில் தான் செல்வோம் என சத்யராஜ் கூறியிருக்கிறார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.