பிரேமலு 2 ஷூட்டிங் எப்போது?
நஸ்லன், மமிதா பைஜு, ஷ்யாம் மோகன் என பலர் நடித்த மலையாள படம், ‘பிரேமலு’. இதை ஃபஹத் ஃபாசில், திலீஷ் போத்தன், ஷ்யாம் புஷ்கரன் தயாரித்தனர். குறைந்த பட்ஜெட்டில் உருவான இந்த ரொமான்டிக் காமெடி படம், கடந்த ஆண்டு பிப்ரவரியில் வெளியாகி, ரூ.130 கோடிக்கு மேல் வசூலித்தது. தமிழ், தெலுங்கிலும் வரவேற்பைப் பெற்றது. இதன் 2-ம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான திலீஷ் போத்தன், “பிரேமலு 2 படத்துக்கான ஸ்கிரிப்ட் வேலைகள் முடிந்து விட்டன. படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும். இந்த வருட இறுதியில் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். முதல் பாகத்துடன் ஒப்பிடும்போது இது பிரம்மாண்டமாக இருக்கும்” என்றார்.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

