BB Tamil 8: பேசவே முடியல பிக் பாஸ்; எமோஷனலா இருக்கேன் - நெகிழும் போட்டியாளர்கள்; நடந்தது என்ன?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் 103- வது நாளுக்கான ( ஜனவரி 17) முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.
கடந்த அக்டோபர் 6 -ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வர இருக்கிறது. நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை நெருங்கி இருக்கும் நிலையில் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக பல சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்து வருகிறது. கடந்த வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அருண் மற்றும் தீபக் எவிக்ஷன் செய்யப்பட்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து இந்த முறை பணப்பெட்டி டாஸ்க்கில் ட்விஸ்ட் வைக்கப்பட்டிருந்தது.
குறிப்பிட்ட நேரத்திற்குள் பெட்டியை எடுத்துக்கொண்டு பிக் பாஸ் வீட்டிற்குள் வராத போட்டியாளர் எவிக்ஷன் செய்யப்படுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்தவகையில் ஜாக்குலின் எவிக்ட் செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் போட்டியாளர்கள் மத்தியிலும், ரசிகர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்நிலையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் புரோமோவில் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களின் மகிழ்ச்சி, மோதல், நகைச்சுவை என அனைத்தையும் ஒருங்கிணைத்து வீடியோ ஒன்றை போட்டியாளர்கள் மத்தியில் போட்டுக் காண்பிக்க அனைவரும் உணர்ச்சியில் உறைந்து போயிருக்கிறார்கள்.
வீடியோவை பார்த்த பிறகு பேசவே முடியல பிக்பாஸ் என்று சௌந்தர்யா சொல்ல இதை விட என் வாழ்க்கையில என்ன கிடைச்சிறப்போகுதுனு தெரியலையே பிக் பாஸ் என்று முத்துக்குமரன் சொல்கிறார். இதுதான் நான் இதை எப்படி நான் சொல்லி புரிய வைக்குறதுனு தெரியல. என்று பவித்ரா சொல்ல முழுமையாக நான் எமோஷனில் இருக்கிறேன் என்று விஷால் சொல்கிறார். அனைவரும் நெகிழ்ச்சியில் திகைத்திருக்கின்றனர்.
#Day103 #Promo1 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) January 17, 2025
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #பிக்பாஸ் #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/ywWZV33CaR
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.


