BB Tamil 8: `யார் இவன்... எந்த சீசன்?’ அர்ணவை கிண்டல் செய்த சத்யா, ஜெஃப்ரி; காட்டமான ரவீந்தர்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் 99-வது நாளுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகி இருக்கிறது.

கடந்த அக்டோபர் மாதம் துவங்கிய பிக்பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை எட்டி இருக்கிறது. இன்னும் நிகழ்ச்சி முடிவடைய சில தினங்களே உள்ளன. இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து, தீபக் மற்றும் அருண் ஆகிய இருவர் வெளியேறியுள்ளனர். டாப் 5 போட்டியாளராக யார் யார் இருக்க போகிறார்கள் என்கிற எதிர்பார்ப்பும் மக்களிடையே நிலவுகிறது.

அர்ணவ் - ரவீந்தர்

இந்நிலையில் இன்று ( ஜனவரி 13) வெளியாகி இருக்கும் இரண்டாவது புரோமோவில் ஜெஃப்ரி, சத்யா இருவரும் உள்ளே பிக் பாஸ் வீட்டிற்குள் சென்றிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து அர்ணவை யார் இவன்... எந்த சீசன் என்றெல்லாம் கிண்டல் செய்கிறார்கள். இன்னும் ஒரு 5 நாள்தான் Fun பண்ணுவோம் என்ன அண்ணே என்று ரவீந்தரைப் பார்த்து சத்யா சொல்ல உங்களை விட நாங்க நல்லா Fun பண்ணுவோம் என்று கோபமாக ரவீந்தர் பேசுகிறார்.

மேலும் படிக்க »

இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.