‘கேம் சேஞ்சர்’ ட்ரெய்லர் எப்படி? - மீண்டும் கம்பேக் தருவாரா ஷங்கர்!
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கேம் சேஞ்சர்’. தில் ராஜு தயாரித்துள்ள இப்படத்துக்கு தமன் இசையமைப்பாளராகவும், திரு ஒளிப்பதிவாளராகவும் பணிபுரிந்துள்ளனர். ஜனவரி 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும் பணிகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன. இதன் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ‘இந்தியன் 2’ பெற்ற மோசமான வரவேற்புக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம். ‘இந்தியன் 2’ படம் உருவாகிக் கொண்டிருந்த போதே இந்த படத்திலும் ஷங்கர் கவனம் செலுத்தி வந்தார். ‘முதல்வன்’, ‘சிவாஜி’-க்கு பிறகு ஷங்கரின் அக்மார்க் பாணியிலான சமூகம் + அரசியல் கருத்துகளைக் கொண்ட முழுமையான படமாக ‘கேம் சேஞ்சர்’ இருக்கும் என்பதை ட்ரெய்லரிலேயே உணர முடிகிறது.
மேலும் படிக்க »
இந்த செய்தியைப் பற்றிய கருத்தை பதிவு செய்யுங்கள். மேலும் இந்த செய்தியை உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

